‘2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம்’ தவெக தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

சென்னை:

“உச்­ச­பட்ச அரசியல் ஒழுங்­கோடு, உல­கமே உற்று நோக்­கிப் போற்றும் வித­மாகக் கொண்­டா­டுவோம் நம் வெற்றி கொள்­கைத் திருவிழாவை .மாநாட்டுக்கு வரும் போதுக் பாதுகாப்­பையும்,     கட்டுப்­பாட்டை­யும் மன­தில் நிறுத்தி, பத்­திர­மாக வாருங்­கள். நம்கழகக் கொடி­யைக் கைகளிலும் மனங்­க­ளிலும் ஏந்தி வாருங்­கள்,” என்று தவெக தொண்­டர்­க­ளுக்கு அக்கட்­சியின் தலை­வர் விஜய் எழுதியுள்ள கடிதத்­தில் கூறியுள்­ளார். இது­தொ­டர்­பாக தனது கட்­சித் தொண்­டர்­க­ளுக்கு அவர் எழுதி யுள்ள கடிதத்­தில், “நம் கழகத்­தின் முதல் மாநில மாநா­டான வெற்றிக்கொள்­கைத் திருவிழாவுக்­காக எழுதும் மூன்­றா­வது கடிதம் இது.மாநாடு நிகழப் போகும் தரு­ணம், நம் மனம் மற்றும் கள வளாகத்­துக்கு வெகு அருகில் வந்­துவிட்­டது.உங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் நேரில் சந்­திக்­கப்போகும் கணங்­கள், நம்மி­டையே இருக்­கும் அன்­பின் கனத்தை இன்­னும் பல­ம­டங்கு கூட்­டப் போகின்றன.அதை வார்த்­தை களில் எப்­ப­டிச் சொல்­வ­தென்று எனக்குத்  தெரியவில்லை. உச்­ச­பட்ச அரசியல்  ஒழுங்­கோடு, உல­கமே உற்று நோக்­கிப் போற்றும் வித­மாகக் கொண்­டா­டு வோம் நம் வெற்றிக் கொள்கைத் திருவிழாவை.அத்­திருவிழா­வைக் கொண்­டாடு­வ­தற்­காக ,பெருந்­திர­ளாக அனை­வ­ரும் மாநாட்­டுக்கு வரும் ­போது பாது காப்­பையும், கட்­டுப்­பாட்டை­யும் மன­தில் நிறுத்தி, பத்­திர­மாக வாருங்­கள்.நம் கழகக் கொடி­யைக் கைகளிலும் மனங்­க­ளிலும் ஏந்தி வாருங்­கள்.உங்­கள் வரு­கைக்காக வி.சாலை எல்­லை­யில், என் இரு கரங்­க­ளையும் விரித்­த­படி, இதய வாச­லைத் திறந்து வைத்­துக் காத்திருப்­பேன். வாருங்­கள் மாநாட்­டில் கூடுவோம். நம் தமிழ்­நாட்டு மண்ணுக்­கான வெற்றிக் கொள்­கை­க­ளைச் செயல்­ப­டுத்த உறுதிபூண்டு முழங்­குவோம்.2026 என்ற இலக்கைநோக்கி, முதல் அடியை எடுத்துவைப்­போம். வி.சாலை என்­னும் வியூகச் சாலை­யில் சந்­திப்­போம், வெற்றி நிச்­ச­யம் என்று விஜய் அக்­க­டி­தத்­தில் கூறியுள்­ளார்.