விருதுநகர் : சிவகாசி சத்தூர் சாலையில் கிழக்கு காவல் நிலையம் அருகே மேட்டூர் டிரான்ஸ்போர்ட் செயல்பட்டு வருகிறது இங்கிருந்து வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது தற்போது தீபாவளி நேரம் என்பதால், அதிக அளவிலான பட்டாசுகள் வெளி மாநிலங்கள் மற்றும் கொண்டு வெளியூர்களுக்கு செல்லப்படுகுகிறது. இந்நிலையில், (புதன் கிழமை) மாலை 6 மணியளவில் பட்டாசுகளை இறக்கிக் கொண்டு இருந்த போது, உராய்வு காரணமாக கம்பி மத்தாப்பு பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. விரைவாக பிறபட்டாசு பெட்டிகளுக்கும் தீ பரவி, அனைத்து பட்டாசு களும் வெடிக்கத் தொடங்கியது. அதிக சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்ததால், நூறு அடி உயரத்திற்கு மேல் புகை எழுந்து, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்ததால் பொது மக் கள் அச்சமடைந்தனர்.பின்னர் தகவலறிந்து வந்த சிவகாசி தீ ய ணைப் பு த் துறையினர், 3 தீயணைப்பு வாகனங்கள் உதவி யுடன் தீயை அணைக்கும் பணி யில் ஈடுபட்டனர். தொடர்ந்து, பட்டாசுகள் வெடித்துக் கொண்டே இருந்ததால், தீயை அணைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்த விபத். தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து வீணானது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்
சிவகாசி பட்டாசு குடோனில் வெடி விபத்து பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதம்!






