“பெஞ்சல்”புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உதவி,

“பெஞ்சல்”புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உதவி,
—————————————-
அண்மையில் வீசிய “பெஞ்சல்”புயலினால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மூன்று மாவட்டங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பும், திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலச்சரிவுடன் வெள்ள பாதிப்பும் ஏற்பட்டது.இதில்பொதுமக்களுக்கும், கால்நடைகள், விவசாய விளை நிலங்கள் என ஒட்டுமொத்தமாக வரலாறு காணாத பெரும் சேதம் ஏற்பட்டது.இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக தேவையான உதவிகளை செய்யும் என்று கூறியதுடன், உடனடி சேத மதிப்பீடுகளை ஆராய்ந்து உதவிகளை வழங்கிட உத்திர விட்டார்.அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் கண்டாச்சிபுரம் வட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட அறம்கண்டநல்லூர், கோட்ட மருதூர்,ஆதிச்சனூர், போன்ற ஊராட்சிகளில் உள்ள குடும்ப அட்டதாரர்களுக்கு தலா:2000ரூபாய் 07.12.2024 முதல் வழங்கப்பட்டு வருகிறது.அதே போன்று கோட்ட மருத்தூர் கிராமத்தில் பாதிக்கப் பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு, 5,கிலோ அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு ஆகிய தொகுப்புடன் ரூபாய்:2000 மும் வழங்கபட்டது.
இந்த நிகழ்வின் போது ஊராட்சி மன்ற நிர்வாகிகள்,விளந்தை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் கோட்டமருதூர் ரேஷன்கடை பணியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
–“தமிழன் உதயம்”செய்திகளுக்காக, விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் M.அல்போன்ஸ் அவர்களுடன்,உதவி ஆசிரியர் பெ.எலியாஸ்,