பாளை தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு – தி.மு.க. வேட்பாளர் அப்துல் வகாப் உற்சாக வரவேற்பு

பாளை தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு – தி.மு.க. வேட்பாளர் அப்துல் வகாப் உற்சாக வரவேற்பு

பாளை சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் மு. அப்துல் வகாப் B.Com., அவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக,  பாளை 8வது வார்டு சமாதானபுரம் பகுதியில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்வு மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
பாளை வடபகுதி பொறுப்பாளர் சையது முகைதின் அவர்களின் ஆலோசனையின் பேரில், சமூக சேவகர் டாக்டர் ரா. ஞான சோமராஜ் மற்றும் சிறுபான்மை அணி நிர்வாகி கி. நி. அண்ணாதுரை தலைமையில், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் திரண்டு, வேட்பாளர் அப்துல் வகாப் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்வில் சுரேஷ் பாலியர்நேசன், மகளிரணி நிர்வாகி கோ. தமிழ்செல்வி, பூங்கனி ஆறுமுகம், இளைஞரணி உறுப்பினர்கள் டேனியல் ஜோண்ஸ், கார்த்திக், பிலிப் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், சமாதானபுரம் C.S.I. ஆலய ஐயர்வாழ் ரெவரெண்ட் ஜான்சன் ஆசீர்வாதம் வழங்கினார். காந்தாரியம்மன் இந்து சபை தலைவர் சாந்தகுமார், தளவாய் அம்மன் கோயில் நிர்வாகி பிரபாகரன், காளியம்மன் கோயில் நிர்வாகி அலெக்ஸாண்டர் முத்தையா, சாம்டன் ஹாக்கி ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் ரஞ்சன் டேனியல், ஆரோன் தாசன் ஆகியோரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
அதேபோல், கழக மூத்த முன்னோடிகள் தங்கராஜ், மௌன்ட் உள்ளிட்டோருக்கு வேட்பாளர் அப்துல் வகாப் அவர்கள் மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்து கௌரவித்தார். பின்னர், “உதயசூரியன்” சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, சமாதானபுரம் C.S.I. கிறிஸ்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. முன்னதாக, சமத்துவத் தலைவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் நெல்லை கிழக்கு மாநகர பொறுப்பாளர் வழக்கறிஞர் A.L.P. தினேஷ், தச்சை சுப்பிரமணியன், மூலிகுளம் பிரபு பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாளை வடபகுதி பொறுப்பாளர் சையது முகைதின் மற்றும் முன்னாள் மாவட்ட கழக பிரதிநிதி டாக்டர் ரா. ஞான சோமராஜ் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகள் பட்டாசு வெடித்து வேட்பாளரை அன்புடன் வரவேற்றனர்.
மேலும், சூப்பர் மணி, ரைமன்ட், சாந்திநகர் பிரான்சிஸ், சமாதானபுரம் மாரி, பிரின்ஸ் குட்டி, வெற்றிச் செல்வன், முருகன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், பெண்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் “எங்கள் கண்களுக்கு வேறு சின்னம் தெரியாது; உதயசூரியன் சின்னத்திற்கே வாக்களிப்போம்” என உறுதியளித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் ரா. ஞான சோமராஜ், கி.நி. அண்ணாதுரை, சுரேஷ் பாலியர்நேசன், டேனியல் ஜோண்ஸ், கார்த்திக், பிலிப் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.