முதல்வர் தலைமையில் மாணவ, – மாணவியர் போதை ஒழிப்பு உறுதிமொழி

சிறப்பாக பணி செய்த போலீஸாருக்கு பதக்கம

சென்னை, ஆக., 13: முதல்­வர் மு.கஸ்­டாலின் தலை­மையில் கல்லூரி மாணவ மாணவி­யர் நேற்று (ஆக.12)
போதைப் பொருட்­கள் இல்­லாத தமிழ்­நாடு என்ற தலைப்பில் உறு­தி­மொழி ஏற்றுக் கொண்­ட­னர். இந்த
நிகழ்­வில், போதைப்பொருள் உற்­பத்தி மற்­றும் கடத்­தலை தடுத்து சிறப்­பாக பணி செய்த போலீஸா­ருக்கு,

‘முத­ல­மைச்­சர் காவ­லர் சிறப்பு பதக்­கங்­கள் வழங்­கப்­பட்­டது. தமிழக முதல்­வர் மு.க.ஸ்டாலின் தலை­மையில் சென்னை பல்கலக்­க­ழகத்தில் நேற்று காலை காவல்துறை சார்பில்,‘போதைப் பொருட்­கள் இல்­லாத தமிழ்­நாடு’
நிகழ்ச்சி நடை­பெற்­றது. இதில் ஆயிரக்­கணக்­கான கல்­லூரி மாணவ மாணவியர் போதைப்­பொ­ருட்­கள்
ஒழிப்பு குறித்த உறுதி­மொ­ழியை முதல்­வர் தலை­மையில் ஏற்றுக்­கொண்­ட­னர்.தொடர்ந்து முதல்­வர்,
மாநி­லத்தில் போதைப்­பொ­ருள் உற்­பத்தி மற்றும் சட்­ட­வி­ரோ­தக் கடத்­தலை ஒழிப்­ப­தில் சிறப்­பாக
பணியாற்றிய போலீ­ஸா­ருக்கு 2024ம் ஆண்டிற்­கான தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் காவ­லர் சிறப்பு பதக்­கங்­களை
வழங்கி சிறப்பித்­தார்.இந்­நிகழ்ச்­சியில் ,உயர்­கல்­வித் துறை அமைச்­சர் பொன்முடி தலை­மைச் செய­லா­ளர்
சிவ்­தாஸ் மீனா, உள்­துறை செய­லர் நீரஜ்கு­மார், டிஜிபியான சங்­கர்ஜிவால், சென்னைகாவல் ஆணை­யர்
அருண், சட்­டம் ஒழுங்குகூடுதல் டிஜிபியான டேவிட்­சன் தேவா­சீர்­வா­தம், மதுவி­லக்குஅம­லாக்­கப்பிரிவு கூடு­
தல் டிஜிபியான அமல்ராஜ் உள்­பட பலர்கலந்து கொண்­ட­னர்