கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
சிதம்பரம் காந்தி சிலை அருகில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாநில தலைவர்R. அப்துல் கரீம் கலந்து கொண்டு சிறப்பரையாற்றினார் இவர் பேசுகையில் வக்ஃப் வாரிய சட்ட திருத்தம் என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு தர்மமாக வழங்கப்பட்ட நிலங்களை அபகரிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு ஈடுபட்டு உள்ளது வக்ஃப் வாரியத்தின் அதிகாரங்களை முற்றிலுமாக அபகரித்து மாவட்ட ஆட்சியருக்கு வழங்குவது என்பது சங்க பரிவாரர்களின் முஸ்லிம் வெறிப்பு செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறையாகும் இஸ்லாமிய மக்கள் நலனுக்காக முன்னோர்கள் வழங்கிய லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாஜக அரசின் கண்களை உறுத்துகிறது
அவற்றை அபகரித்து அதானி அம்பானி உள்ளிட்டோருக்கு வழங்குவதற்கு ஊழல் செய்வதற்கும் பாஜக சதி வேலை செய்கிறது வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் இல்லாதவர்களை நியமிக்க கூடிய நடைமுறைகளை பாஜக அரசு ஆளும் மாநிலங்களில் நடைமுறைப்படுத்த நிலங்களை அபகரிக்க முயற்சி செய்கிறது எந்த மசோதாவானதுவக்பு வாரியத்தின் வருமானத்தை குறைத்து அதை மேலும் பலவீனப்படுத்தி ஆக்கிரமிப்பு நடைமுறைப்படுத்த உள்ளது சர்ச்சரிக்குறிய நிலங்களுக்கு தீர்வு காணும் அதிகாரம் கலெக்டர் உள்ளிட்டவருக்கு வருவாய்
துனருக்கும் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் வாரியத்தின் தீர்ப்பாயத்தை தீர்த்து போக செய்துள்ளனர் அரசு கட்டாயம் திரும்ப பெற வேண்டும் அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறினார்கள் இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் கலந்து கொண்டார்கள்.






