சேரன்மகாதேவியில் பொதுமக்கள் – போலீசார் நல்லுணர்வை மேம்படுத்தும் பொருட்டு சுதந்திர தின விளையாட்டு போட்டி;
நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் அறிவுறுத்தலின்படி, சேரன்மகாதேவி துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் வழிகாட்டுதலின்படி, சேரன்மகாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் தலைமையில் பொதுமக்கள் மற்றும் போலீசார் உடைய நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு சேரன்மாதேவி போலீசார் சார்பாக சேரன்மகாதேவி அரசு பள்ளி மைதானத்தில் சுதந்திர தின விளையாட்டு போட்டி நடைபெற்றது.
குறிப்பாக சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்ற இந்த விளையாட்டு போட்டியில், மெதுவாக சைக்கிள் செல்லுதல், கயிறு இழுத்தல், வாலிபால், முறுக்கு கடித்தல் என பல்வேறு வித விதமான விளையாட்டுப் போட்டிகள் போலீசார் சார்பாக நடத்தப்பட்டது.

இதில் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு விதவிதமான பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் தற்போது ஜாதி மோதல் அதிகரித்து வரும் நிலையில் போலீசாரின் இந்த முயற்சி பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது






