இராமநாதபுரம். ஆக.11 இராமநாதபுரம் மாவட் டம் முதுகுளத்தூர் தாலு காவில் நடைபெறும்
அரசு நிகழ்ச்சிகள் மற்றும் முதுகுளத்தூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கூட்டம்,
ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு முறை யாக அனைத்து
பத்திரிக்கையாளர்களுக்கும் தகவல் சொல்வதில்லை. அரசு அலுவலகங்களில் பணி புரியும்
சில அதிகாரிகள் பெரியபத்திரிக்கை, சிறிய பத்திரிக்கை என்றுபிரித்துப்பார்த்து ஒரு
சிலருக்கு மட்டும் தகவல்சொல்கின்றனர். இதனால் சிறிய பத்திரிக்கை யாளர்களை
முற்றிலுமாக புறக்கணிக்கும் வகை யில் இவர்களின் செயல்பாடுகள் உள்ளது. இதன்
விளைவு அரசுநிகழ்ச்சிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் பத்திரிக்கை செய்திகள்
மூலமாக பொது மக்களை முழுமையாக சென்றுஅடையாமல் இருட்டடிப்பு செய்யப்படும்
சூழ்நிலை ஏற்படுத்தப்படுகிறது. ஆகையால் பொது மக்களின் நலன்கருதி இனிவரும்
காலங்களில்பெரிய பத்திரிக்கை,சிறிய பத்திரிக்கை என்று பிரித்து பார்க்காமல்
அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் முறையான தகவல் கொடுக்க
நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் சார்பில்
மாவட்ட நிர்வாகம் மற்றும் முதுகுளத்தூர் அனைத்து துறை அரசு
அ திகாரிகளுக்கும் கோரிக்கை வைத்தனர்.






