நியாய விலை கடை மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி பகுதிகளில் சட்டமன்ற பொது உறுப்பினர் நிதி, மாநகராட்சி பொது நிதியிலிருந்து மொத்தம் ரூபாய் 86 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்.
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி16 வார்டு பகுதியில் சந்தைப்பேட்டை மலையடிவாரம் தீப்பெட்டி காரத் தெருவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை மற்றும் இதே போல் மாநகராட்சி37வதுவார்டு முத்து மாரியம்மன் கோயில் தெரு ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் எதிரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டநியாவிலை கடைமற்றும் 42 வது வார்டு கீழக்கல்கண்டார் கோட்டையில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை மற்றும் திருவெறும்பூர் 40வது வார்டுக்கு உட்பட்ட காவிரி நகரில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை மற்றும் 40 வது வார்டில் உள்ள பகவதிபுரத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் இதேபோல் 41 வது வார்டு மாரியம்மன் கோவில் தெருவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் என சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியிலிருந்துரூபாய் 86 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை மக்களின் பயன்பாட்டிற்கு தமிழக பள்ளிகள் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அர்ப்பணித்தார்
மேலும் இந்நிகழ்வில் மண்டல குழு தலைவரும் மாநகர செயலாளர் மதிவாணன் உதவி ஆணையர் சரவணன் செயற்பொறியாளர் ஜெகஜீவராமன் மாமன்ற உறுப்பினர்கள் நீலமேகம், சிவக்குமார், கோவிந்தராஜ், வட்டக் கழகச் செயலாளர்கள் மாநகராட்சி அதிகாரிகள் அரசு ஊழியர்கள் அலுவலர்கள் என ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.






