கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தேமுதிக கட்சியின் சார்பில் ஆலோசனைக் கூட்டம்
நடைபெற்றது இந்த கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் பாலு மற்றும் சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் உமாநாத் மாவட்ட துணை செயலாளர் பானு சந்தர் பொருளாளர் தென்னவன் மற்றும் ராஜ வன்னியன் மற்றும் ஒன்றிய கழக செயலாளர்கள் வார்டு செயலாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் நகராட்சி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள் இதில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது வருகின்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அண்ணா திமுக கூட்டணியில் போட்டியிடுவது கடலூர் தெற்கு மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சிகளை இரண்டாக பிரிப்பது வருகின்ற கேப்டனின் நினைவு நாளான டிசம்பர் 28 அன்று 20க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிர்வாகிகள் மற்றும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் தாய்மார்கள் இவருடன் சென்று கேப்டனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவது போன்ற தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன அன்றைய தினம் கிளைக் கழகங்கள் ஊராட்சிகள் நகராட்சிகளில் பொதுமக்களுக்கு அன்னதானங்கள் கேப்டன் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது சிதம்பரம் நகர மன்ற உறுப்பினரும் சிதம்பர நகர செயலாளருமான பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்






