ஸ்ரீமுஷ்ணம் அருகே அங்காள பரமேஸ்வரி திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த முடிகண்டநல்லூர் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கல்யாணம் நடைபெற்றது முன்னதாக விநாயகர் முருகர் அபிஷேக ஆராதனை நடைபெற்றது இதனை தொடர்ந்து வீரன் அங்காள பரமேஸ்வரிக்கு பால் தேன் இளநீர் விபூதி சந்தனம் குங்கும அபிஷேகம் நடைபெற்ற நிலையில் முடிகண்டநல்லூர் கிராம பெண்கள் அவர்களாலே வசூல் செய்து அங்காள பரமேஸ்வரிக்கு தாலி மற்றும் 16 வகையான பழங்கள் பட்டுப் புடவை என சீர்வரிசையாக எடுத்து வரப்பட்டன அங்காள பரமேஸ்வரி கோவிலில் சித்தர் செல்வராஜ் செவ்வாய் வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜை செய்து வந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கோவிலுக்கு வருவது வழக்கமான கொண்ட நிலையில் அதோடு குறி சொல்வது பில்லி சூனியம் செய்வினை நிவர்த்தி செய்வது என பல மக்கள் தங்களது குறைகளை தீர்க்க இக்கோயிலுக்கு வருவது வழக்கம் இந்நிலையில் இன்று ஆடி மாத நான்காம் வெள்ளிக்கிழமை என்பதால் இன்று அங்காள பரமேஸ்வரிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது இங்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல் நினைத்தபடி நடைபெற்று வருவதாகவும் பல்வேறு வேண்டுதலுக்கு இணங்க தாங்கள் நேர்த்திக்கடன் செய்வதாக கூறப்படுகிறது






