திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகை நயன்தாரா மலைக்கோவிலுக்கு வந்த போது அருகில் உள்ள பெண் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். மற்றொரு பெண் கையில் செல்போன் வைத்துள்ளார். இதை அருகில் உள்ள காவலாளிகள் கண்டு கொள்ளாமல் இருந்தனர். சட்டம் என்பது சாமானியர்களுக்கு மட்டும் தானா? வலியவர்களுக்கு இல்லையா என்று பக்தர்கள் கேள்வி எழுப்பி கடந்து சென்றனர்.
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை ? தடையை மீறிய நடிகை நயன்தாராவின் ரசிகர்கள்?






