இந்து மக்கள் கட்சி தமிழகம் 21 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் இந்து மக்கள் கட்சி தமிழகம் 21வது விநாயகர் சதுர்த்தி விழா 9.9.2024 மாலை 5 மணிக்கு செண்ப

க வள்ளி அம்மன் கோவிவில் இருந்து புறப்பட்டு மெயின் பஜார் வீரவநல்லூர் பேருந்து நிலையம் வழியாக காருக்குறிச்சி குளத்தில் விஜர்சனம் செய்யப்பட்டது. முன்னாதாக ஸ்ரீ ஸ்ரீ பச்சை வேஷ்டி சுவாமிகள் விநாயகருக்கு பூஜை செய்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இதில் இந்து மக்கள் கட்சி தமிழகம் மாநிலத் துணைத் தலைவர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.சேரை ஒன்றிய செயலாளர் ஆதிமூலம் என்ற ராஜா வீரை நகர தலைவர் முத்து நெல்லை மாவட்ட துணை தலைவர் சங்கர் விவேகானந்தர் கேந்திர அமைப்பாளர் கிருஷ்ணன் செட்டியார் வீரை இந்து வியாபார செயலாளர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






