சென்னை ஆக.5கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் வங்கதேசத்தை சேர்ந்த 8பேரை போலீசார் கைது செய்தனர்.இது தொடர்பாக டில்லியில் வசிக்கும் மேற்கு வங்கத் தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு டில்லி போலீசார் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.அதில். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொழி பெயர்க்க வங்கதேச மொழியில் புலமை பெற்றவரகள்
தேவை” என கூறியிருந்தனர். அதில், டெல்லி போலீசார் வங்காள மொழி என்று குறிப்பிடாமல் வங்க தேசமொழி என குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வங்கதேச முதலமைச்சர் மமதா பேனர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டு ள்ள எக்ஸ் பதிவில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி போலீசார் வங்காள மொழியை வங்கதேச மொழி எனகுறிப்பிட்டுள்ளனர்.வங்காள மொழிஎங்கள் தாய்மொழி. ரபிந்திரநாத்தாகூர்.சுவாமி விவேக னந்தர் ஆகியோரின் மொழி. தேசியகீதம், பங்கிம் சந்திரசட்டர்ஜி எழுதிய தேசிய பாடல் ஆகியவை எழுதப்பட்ட மொழி.வஙகாள மொழியை வங்கதேச மொழியாக குறிப்பிடுவது தேசவிரோதமான அரசியலமைப்புக்கு எதிரானது. இது இந்தியா முழுவதும் வங்காள மொழி பேசும் மக்களுக்கு ஏற்பட்ட அவமானம் ஆகும். இந்தியாவின் வங்காள மொழி பேசும் மக்களை அவமதிக்கவும், அவமானப்படுத்தவும் இது போன்ற அரசியலமைப்பு விரோத மொழியை பயன்படுத்தும் வங்காள எதிர்ப்பு இந்திய அரசுக்கு எதிராக வலிமையான எதிர்ப்பை பதிவு செய்கிறேன்” என்று பதித்துள்ளார். இந் நிலையில், மம்தாபானர்ஜியின் கண்டன பதிவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித் துள்ளார்.இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை, வங்காள மொழியை” வங்கதேசமொழி” என்று குறிப்பிட் டுள்ளது. இது நமது தேசியகீதம் எழுதப்பட்ட மொழிக்கே அவமானம் ஏற்படுத்துவதாகும்.இது போனற அறிக்கைகள் தற்செயலான பிழைகள் அல்லது தவறுகள் அல்ல.பன்முகத்தனமையை தொடர்ந்து குறை மதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு ஆட்சியின் இருண்டமன நிலையை அவை அம்பலப படுத்துகின்றன. இந்தி அல்லாத மொழிகள் மீதான இந்த தாக்குதலை எதிர கொள்ளும் போது. மேற்கு வங்காள மொழிக்கும் மக்களுக்கும் மம்தாபானர்ஜி ஒரு கேடயமாக நிற்கிறார்.இதற்கு சரியான பதிலடி கொடுக்காமல் இந்த தாக்குத்தலை அவர் கடந்து செல்லவிடமாட்டார் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே அவமானம்- மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்!






