அக்டோபர்
திருச்செந்தூர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்செந்தூர் ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் தோழர் சுந்தர் அவர்கள் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களை கண்டித்தும், தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தொடரும் சாதிய வன்கொடுமைகளை கட்டுப்படுத்த கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் அருகில் வைத்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விசிக மாவட்ட அமைப்பளர் இசிஎ பா சு. விடுதலைச் செழியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செய்தி தொடர்பு மையத்தின் மாவட்ட அமைப்பாளர் வேம்படிமுத்து வரவேற்பு கூறினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் வடிவேல் முத்து, காயல்பட்டணம் நகரச் செயலாளர் அல் அமீன், கானம் நகரச் செயலாளர் துரை, இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறையின் ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் குருகாட்டூர் அருண் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ராஜ்குமார், மீனவர் மேம்பாட்டுப் பேராயத்தின் மாநில துணைச் செயலாளர் மங்கை சேகர், முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்ட துணை அமைப்பாளர் பாபாசாகிப் அருண் ஆகியோருடன் நானும் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினோம்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை கலை இலக்கியப் பேரவையின் மாவட்ட அமைப்பாளர் சிறுத்தை சிவா, முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்ட துணை அமைப்பாளர் பாபாசாகிப் அருண், ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய பொருளாளர் அழகேசன், தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் நந்தா ராஜா, மாவட்ட துணை அமைப்பாளர்கள் சரவணராசா, லாசர், திருவை குண்டம் ஒன்றிய அமைப்பாளர் பாதகரை முத்து, திருச்செந்தூர் ஒன்றிய துணை அமைப்பாளர் ரமேஷ், திருவைகுண்டம் ஒன்றிய துணை அமைப்பாளர் ராஜேஷ், சமூக நல்லிணக்கப் பேரவையின் மாவட்ட துணை அமைப்பாளர் அந்தோணி ராஜ், மீனவர் மேம் பாட்டுப் பேராயத்தின் மாவட்ட துணை அமைப்பாளர் முருகேசன், விவசாயத் தொழிலாளர் விடுதலை முன்னணியின் ஆழ்வார் திருநகரி மேற்கு ஒன்றிய அமைப்பாளர் ராமகிருஷ்ணன், இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் திருச்செந்தூர் ஒன்றிய துணை அமைப்பாளர் மதியழகன், காயல்பட்டணம் நகர அமைப்பாளர் இசக்கிமுத்து, தென்திருப்பேரை நகர அமைப்பாளர் முருகப் பெருமாள், ஆத்தூர் நகர அமைப்பாளர் வெள்ளத்துரை, ஆறுமுகநேரி நகர துணைஅமைப்பாளர் காளிதாஸ்,

திருச்செந்தூர் நகர துணை அமைப்பாளர் சரவணன், தொழிலாளர் விடுதலை முன்னணியின் திருச்செந்தூர் ஒன்றிய துணை அமைப்பாளர் முத்துக்குமார், ஜெய்பீம் ஆட்டோ ஓட்டுநர் நலச் சங்கத்தின் தலைவர் பாண்டித்துரை, துணைத் தலைவர் ராஜா, அருணாச்சலபுரம் முகாம் பொறுப்பாளர் ராம்குமார், நா. முத்தையாபுரம் முகாம் பொறுப்பாளர் ஞானகுமார், மாடசாமிபுரம் முகாம் பொறுப்பாளர் சண்முகம், தோப்பூரைச் சார்ந்த தோழர்கள், நந்தகுமார் முனீஸ்,, காந்திபுரம் பகுதியைச் சார்ந்த சரவணன், குரங்கன் தட்டு பகுதியைச் சார்ந்த மேஷாக் உள்ளிட்ட தோழர்கள் மற்றும் நடுநாலுமூலைக் கிணறு பகுதியைச் சார்ந்த மகளிர், ஓவியர் நந்தன் தினேஷ் என ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறையின் மாவட்ட துணை அமைப்பாளர் ராவணன் அனைவருக்கும் நன்றி கூறினார்.






