சென்னை,ஆக.3 – பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நடைபெற்ற கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டத்தில் பேசியபோது, என் வீட்டிலேயே, நான் அமரும் நாற்காலிக்கு பக்கத்திலேயே யாரோஒட்டு கேட்கும் கருவியை வைத்துள்ளனர். யார் வைத்தார் கள்?, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சிசெய்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.டாக்டர் ராமதாஸ் கூறிய இந்த குற்றச்சாட்டு கட்சியின ரிடையே பெரும் அதிர்வலையை ஏற்ப டுத்தியது. இதையடுத்து சென்னை யில் இருந்து தனியார் துப்பறியும் நிறுவனத்தை சேர்ந்த 5 பேர் கோண்ட குழுவினர் கடந்த மாதம் 12-ந்தேதி திண்டிவனம் அடுத்ததை லா புரம் தோட்டத்திற்கு வந்து அந்த கருவியை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.இந்த கருவியை டாக்டர் ராமதாஸ் வீட்டில் யார் வைத்தார் கள் என்பதை கண்டறிந்து நடவடிக் கை எடக்கும் படி கிளியனூர் போலீஸ் நிலையம் மற்றும் விழுப் புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் பாமக தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் புகார் அளித்தார். அதன் பேரில் கடந்த 17 – ந் தேதி 8பேர் கொண்ட போலீஸ் குழு வினர் டாக்டர் ராமதாஸ் வீட்டிற்கு சென்று சோதனை மேற் கொண்ட னர். தனியார் துப்பறியும் நிறுவனத் தினர் ஆய்வுக்காக கொண்டு சென்ற கருவியை மீண்டும் டாக்டர் ராமதாசிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து ஒட்டு கேட்கும் கருவி ஆய்வுக்காக கிளியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசியிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிலையில், சென்னையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: எனது தைலாபுரம் வீட்டில் உளவுக்கருவி(ஒட்டுக் கேட்கும் கருவி) வைத்தது அன்புமணி தான். உலகிலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்பு மணிராமதாஸ் தான். அன்புமணி செயல் தலைவரான அன்புமணி அறிவித்துள்ள பொதுக்குழு கூட்டம் கட்சி விதி களுக்கு எதிரானது; சட்டவிரோதம்.பொதுக்குழுவை கூட்ட வேண்டு மேன்றால் 15 நாட்க ளுக்கு முன்பு தகவல் தெரிவிக்க வேண்டும்.நான் வியர்வை சிந்தி உழைத்து உருவாக்கிய கட்சியை வேறும் யாரும் உரிமை கோரமுடி யாது. பாமக நான் உருவாக்கிகட்சி; நான் தான் நிறுவனர், தலைவர் எல்லாம். பூம்புகார் மகளிர் மாநாட்டில் 3 லட்சம் பெண்கள் பங்கேற்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
எனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவியை வைத்தது அன்புமணி – ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!






