அம்பாசமுத்திரம், ஆலங்குளம் தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல்

அம்பாசமுத்திரம், ஆலங்குளம் தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களுக்கு நேர்காணல்

சென்னை: அம்பாசமுத்திரம் மற்றும் ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த நேர்காணலில் கழகத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், கழகத்தின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு விருப்பமனுதாரர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

நிகழ்வில் நெல்லை மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான இரா. ஆவுடையப்பன் உடன் இருந்தார்.
மேலும், இந்த நேர்காணலில் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன், மாநில நிர்வாகி கணேஷ் குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நேர்காணல் மூலம் தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.