கிருஷ்ணகிரி மாவட்டம்
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப் படுவதை கண்டித்து இந்துக்கள் அமைப்புகளின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கலந்துக் கொண்டார் – அனுமதியின்றி ஆர்பாட்டம் நடைபெற்றதாக பின்னர் கைது செய்யப்பட்டார்
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப் படுவதை கண்டித்து கோசங்கள் எழுப்ப பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வங்க தேசத்தில் இந்துக்கள் தாக்கப் படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தாக்குதல் குறித்து ஐநா அமைப்புகள் சிறப்பு குழுவை அனுப்பி விசாரணை நடத்தி குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும். இந்திய அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. எனினும் நாடு முழுவதும் இந்துக்களின் உணர்வுகளை ஒன்றுபடுத்தவே இந்த ஆர்பாட்டம் நடத்த படுகிறது. தமிழக அரசு இதற்கு அனுமதி மறுத்து இருப்பது கண்டனத்துக்கு உரியது. இந்துக்களின் உணர்வுகளை தடுக்க வேண்டாம். மடை திறந்த வெள்ளம் போல் மாறிவிட கூடும் என்று கூறினார். பின்னர் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்க பட்டுள்ளதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் ஆயிரம் பேர் கைது செய்ய பட்டனர்.
தேசிய பொதுக் குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் சிவ பிரகாஷ், முன்னாள் மாவட்ட தலைவர் முனிராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கவியரசு, மாவட்ட செயலாளர் MR ராஜேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மீசை அர்ஜுனன், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கலைக் கோபி,
RSS வினோ பாரதி, கணேசன், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






