அக்யூஸ்ட் திரைவிமர்சனம்
பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உதயா, யோகி பாபு, அஜ்மல் ஜான்விகா கலகேரி, தயாரிப்பாளர் தயா பன்னீர்செல்வம் மற்றும் பலர் நடித்து ஆகஸ்ட் 1ல் வெளியாகும் படம் அக்யூஸ்ட்
கதை
லோக்கல் ரவுடியான உதயா (கனகு சுப்புரத்தினம்)
மினிஸ்டரை கொலை செய்கிறார்.
புழல் சிறைச்சாலையில் இருந்து சேலத்திற்கு அழைத்துச் செல்கின்றனர் வழியிலேயே உதயாவை கொல்வதற்கு மினிஸ்டர் மகன் முயற்சி செய்கிறான். என்கவுன்ட்டர் செய்வதற்குக் காவல்துறையும் முயற்சி செய்கிறது.
யாரிந்தக் கணக்கு, (உதயா) அவன் செய்த குற்றமென்ன, அவன் உயிருடன் நீதிமன்றத்துக்குச் சென்றானா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
பிரபு நாயகனாக நடித்த திருநெல்வேலி (2000) படத்தில் அறிமுகமான உதயாவிற்கு, இது திரையுலகில் 25 ஆம் ஆண்டாகும். இன்று வரை துடிப்புடன் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்து சிறப்பாக நடித்து இருக்கிறார்.
குற்றஞ்சாட்டப்பட்டவரை நீதிமன்றத்தில் ஒப்படைக்க, அழைத்து செல்லும் காவலர்களில் ஒருவராகச் செல்லும் வேந்தன் பாத்திரத்தில் அஜ்மல் சிறப்பாகவே நடித்துள்ளார்.
மலராக கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார் ஜான்விகா
லாட்ஜ் ஓனர் ராமா நாயுடுவாக யோகிபாபு நடித்து தனது பாணியில் அனைவரையும் கலாய்த்துக் சிரிக்கவைக்கிறார். நாகராஜ் எனும் குணசித்திர வேடத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவரான தயா பன்னீர் செல்வம் சிறப்பாக நடித்துள்ளார். ஷாந்திகா, பவண், இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ்,பிரபு சாலமன், டி சிவா, ஷங்கர் பாபு, ஜெயகுமார், தீபா, சுபத்ரா,
ஸ்ரீதர் என இதில் நடித்திருக்கும் அனைவரும் அவரவர் கதாபாத்திரம் உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளனர்.
நரேன் பாலகுமாரின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் ரசிக்கவைக்கிறது.
மருதநாயகத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம்.
ஒரு கைதியும், ஒரு போலீஸும் ஒன்றாகப் பயணிக்கும் ஒரு வரிக்கதைக்கு நல்ல விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்து எல்லோரும் ரசிக்கும்படி சுவாராஸ்யமாக சொல்லியுள்ளார் இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ். பாராட்டுக்கள். பார்க்கலாம்.






