காவல் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு!

திருநெல்வேலி. ஜுலை.29 – திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி பகுதியில் இரு தரப்பினருக் கிடையே ஏற்பட்ட மோதலை தடுக்கச் சென்ற பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வ ளர் முருகன் என்பவரை அரிவா ளால் வெட்ட முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. பாப்பாகுடியில் ரஸ்தா எந்த இடத்தில் 17 வயது சிறுவன் ஒருவனுக்கும், அதே பகுதி யைச் சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இடையேநேற்று மோதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் சம்பவ இடத்துக்குச்சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித் துள்ளார்.அப்போது அங்கு ஆத்திரத்தில் இருந்த 17 வயது சிறுவன் உதவி ஆய்வாளர் முருகனை அரிவாளால் தாக்க முயற்சித்து உள்ளார். இதை சற்றும் எதிர்பார்க்காத உதவி ஆய்வாளர் வீட்டுக்குள் இருந்த கழிவறைக்குள் சென்று கதவை மூடிவிட்டு ஒளிந்து கொண்டார். ஆனாலும் அச்சிறுவன் ஆத்திரத்தில் அரிவாளால் கழி வறையின் கதவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழிவறை யின் கதவு வெட்டுப்பட்டு துண்டா னது. இத னால் நிலை குலைந்த உதவி காவல் ஆய்வாளர் ஒரு கட்டத்தில் தற்காப்புக்காக தன்னிட மிருந்த துப்பாக்கியால் சிறுவனை நோக்கிச்சுட்டுள்ளார். இதில் சிறுவனின் வயிற்றுப்பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது. அச்சிறுவன் திருநெல் வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இதனிடையே சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற் கொண்டு உள்ளனர். காவல் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், சீருடை யில் இருக்கும் அதிகாரி ஒருவரிடம் அத்து மீறியதாகவும் அத்து மீறி வீட்டுக்குள் புகுந்து பெண்களை அவதூறாகப் பேசிதாக்குதல் நடத்தி யதாகவும் 11 பிரிவுகளில் அச் சிறுவன் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இச்சம்பவம் பாப்பாக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது இதை அடுத்து அங்கு போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.