நாகர்கோவில் அக் 20 ; குமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழக அரசு சார்பில் த.நா. 74 எண் 1813 என்ற ஒரே பதிவு எண்ணில் மூன்று அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக வெவ்வேறு பேருந்துகளை காண்பித்து மூன்று பேருந்துக்கும் ஒரே பதிவு எண் இருப்பது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகிப் பேசும் பொருளாக மாறியது. பலரும் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் சிலர் தங்களது கமாண்டில் தமிழக அரசை வசைப்பாடி வருகிறார்கள். ஒரே பதிவு எண் 3 பஸ்கள் போடுவது சாத்தியமா? என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், இது திரிக்கப்பட்ட தகவல் என்று தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரி பார்ப்பகம் தெரிவித்துள்ளது. த.நா.74 என் 1813 என்ற இந்த பஸ் 82 20 17 அன்று புதிய பஸ்சாக கூண்டு கட்டி 93 20 17 முதல் புறநகர் பஸ் ஆக நாகர்கோவில் திருவனந்தபுரம் தளத்தில் இயக்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் கழித்து இந்த பஸ்ஸுக்கு பதில் புதிய பஸ் இயக்கப்பட்டதால் 41 20 20 முதல் இது நகர பஸ்சாக (இருக்கை மாற்றம்) செய்யப்பட்டு இயக்கப்பட்டது. இந்த பஸ்சின் வயது 6ஐ கடந்த நிலையில் அரசாணைப்படி கடந்த 71 0 20 23 அன்று இதன் கூண்டு புதுப்பிக்கப்பட்டு நகர பஸ்சாக நாகர்கோவில் மேல் மிடாலம் (தடம் எண் : 9 ஏ) ஏக்கப்பட்டு வருகிறது என்று கன்னியாகுமரி போக்குவரத்து வணிக மேலாளர் தெரிவித்துள்ளார். என்று மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழக அரசு கொடுத்துள்ள விளக்கத்தின் மூலம் ஒரே பதிவு எண் கொண்ட இந்த ஒரே பஸ் மூன்று கட்டங்களில் மூன்று தோற்றத்தில் மூன்று வழித்தடத்தில் ஓடியது தெரியவந்துள்ளது. ஒரே பதிவு எண்ணில் வெவ்வேறு தோற்றத்தில் தனது மூன்று முகத்தை பாட்டி சமூக வலைத்தளங்களில் வைரலான புதிருக்கு விடையை கொடுத்து முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது தமிழக அரசு.
ஒரே பதிவு எண்ணில் 3 பேருந்து என்பது தவறான தகவல்; தமிழக அரசு விளக்கம்!






