ராமேசுவரம்,ஜூலை.11 ராமேசுவரம் விசைப்படகு மீனவர்களை இலங்கை கடற்படையினர்
தலைமன்னார் அருகே வலைகளை வெட்டி விரட்டியடித்தனர். ராமேசு வரம் மீன் பிடித்துறை முகத்தில் இருந்து 450- க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக் குச் சென்றனர். நள்ளிரவில் மீனவர் கள் தனுஷ் கோடிக்கும் தலைமன் னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது,ரோந்து வந்த இலங்கை கடற்படை யினர், எல்லை தாண்டி மீன்பிடித்தாகக் கூறி 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் இருந்து வலைகளை கடலுக்குள் வெட்டி எறிந்தனர்.இலங்கை கடற் படையினர் விரட்டியடித்ததால் அச்சமடைந்த 50-க்கும் மேற்பட்ட ராமேசுவரம் விசைப்படகுகளுடன் மீனவர்கள் மீன் பாடு இல்லாமலும், சிலர் மீன் பிடிக்காமலும் நஷ்டத்து டன் வியாழக்கிழமை கரை திரும்பினர்.
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!






