புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட் கட்டாயம்

விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு

புதிய இரு­சக்­கர வாகனம் வாங்­கு­வோ­ருக்கு,வாகன உற்­பத்தி­யா­ளர்­கள் இரண்டு ஹெல்­மெட்­களை வழங்­குவதை கட்­டா­ய­மாக்க மத்திய அரசுதிட்­ட­மிட்டுள்­ளது. அது­போல ஆன்டிலாக் பிரேக்­கிங் சிஸ்­டத்தை கட்­டா­யமாக்­க­வும் முடிவுசெய்­துள்­ளது.இந்த புதிய விதி­களை நடை­மு­றைப்­படுத்த மத்­திய மோட்­டார் வாகனவிதி­கள், 1989ல் திருத்­தம் செய்ய மத்திய சாலைப்போக்கு வரத்து மற்­றும் நெடுஞ்­சாலை அமைச்­சகம் பரிந்துரை செய்­துள்ளது. இது தொடர்­பாக மத்­திய அரசு வெளியிட்ட அறிக்­கையில் மேலும் கூறியிருப்­பதாவது: புதிய திருத்­தங்­கள் அதி­காரப்­பூர்வ அரசிதழில் வெளியி­டப்­பட்ட 3 மாதங்­க­ளில் இந்த விதி­கள் நடை­மு­றைக்கு வரும். வாகன ஓட்­டுநர் மற்றும் பின்­னால் அமர்ந்து பயணிப்­பவரின் பாது­காப்பை உறுதி செய்வதே இதன் நோக்­கம்.இந்த ஹெல்­மெட்­கள் பிஐஎஸ் (இந்திய தர நிர்ணய அமைப்பு) நிர்­ண­யித்த தரத்துடன் இருக்க வேண்டும். ஹெல்­மெட் விதியுடன் கூடுத­லாக, ஜனவரி 1, 2026 முதல் 50 சிசிக்கு மேல் இன்ஜின் திறன் அல்­லது மணிக்கு 50 கி.மீ.க்கு மேல் அதி­க­பட்ச வேகம் கொண்ட மோட்­டார் சைக்­கிள், ஸ்கூட்­டர் உள்­ளிட்ட அனைத்து எல்2 வகை இரு­சக்­கர வாக­னங்­க­ளி­லும் ஆன்டிலாக் பிரேக்கிங் சிஸ்­டம் (ஏபிஎஸ்) பொருத்­துவதை கட்­டா­ய­மாக்­கவும் அரசு திட்­ட­மிட்டுள்ளது. இது வாக­னத்தின் கட்டுப்­பாட்டை மேம்­ப­டுத்தி சறுக்குவதை தடுக்­கும். இந்த புதிய விதி­கள் குறித்து பொதுமக்­கள் தங்கள் பரிந்துரை மற்றும் ஆட்­சே­ப­னை­களை commentsmorth@gov.in. என்ற மின்­னஞ்­சல் மூலம் அனுப்­ப­லாம். இதற்கு 30 நாட்­கள்அவ­கா­சம் வழங்­கப்­பட்டுள்­ளது. இவ்­வாறுஅந்தஅறிக்­கையில் கூறப்­பட்டுள்­ளது.