2026 ல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் இடம்பெறும் கூட்டணி தான், ஆட்சி அமைக்கும். ஜான்பாண்டியன் பேட்டி.

திரு­நெல்­வேலி மாவட்­டம், வீரவ­நல்லூரில் தமி­ழக மக்­கள் முன்­னேற்­றக்கழகத்தின் நிறுவ­னர்
தலை­வர் ஜான் பாண்டி­யன் செய்­தியா­ளர்­க­ளைச்சந்தித்­தார். அப்­போதுபேசிய அவர், “தமிழகத்­தில் சட்­டம் ஒழுங்கு சரி­யாக இல்லை. அண்­மையில் கோவில்­பட்டியில் இரட்­டைக் கொலை போதை­யி­னால் நிகழ்ந்­துள்­ளது. மது, கஞ்சா போன்ற போதை பொருள்­க­ளால் தமிழகத்தில் குற்றங்­கள் நிகழ்ந்து வருகின்­றன. குறிப்­பாக தென்மா வ ட்­டங்­க­ளில் போதைப் பொருள்­கள்
பயன் ­பாடு அதிக­மாக உள்­ளது. கஞ்சா போன்ற போதைப்பொருள்­களை ஒழிக்க தமிழக அரசு கடும் நட­வடிக்கை எடுக்க வேண்டும் என்­றார்.2026 ல் நடை­பெ­றவுள்ள சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் எந்த கட்சியு­டன் கூட்­டணி என்­பது குறித்து கட்சியின் பொதுக்குழு, செயற்­கு­ழுக் கூட்­டத்தில் முடிவு
செய்­யப்­படும். இப்போதே கூட்­டணி குறித்து முடிவு செய்ய முடியாது.தமிழக மக்­கள் முன்­னேற்றக் கழகத்திற்கு உரிய பிர­திநிதித்துவம் அளிக்கும் கட்சியு­டன் கூட்­டணிஅமைப்­போம்.2026 சட்­டப்­பே­ர­வைத்தேர்­த­லில் சில கட்சிகள் அணி மாற­லாம். எந்த அணியில் தமிழக மக்­கள் முன்­னேற்­றக் கழகம் இடம்­பெற்­றா­லும் அந்­தக் கூட்­டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்­கும். ஆகவே, ஆட்சியில்
பங்கு கேட்­போம். இந்த கருத்­தைத் தான் விடு­தலை சிறுத்­தை­கள் கட்சி தலை­வர் திரு­மா­வ­ள­வனும் தொடர்ந்து வலியுறுத்தி வருகி­றார். நீண்ட கால­மாக இந்த கருத்தை தமி­ழக மக்­கள் முன்­னேற்­றக் கழகமும் வலியுறுத்தி வருகி­றது.பாட்­டாளி மக்­கள் கட்­சியில் நிலவுவது தந்தை மகனுக்கு இடையே எழுந்துள்­ளது மனக்­க­சப்புதான் விரை­வில் அது சரி­யாகும் என­வும் கூறியுள்­ளார்.