புரட்சியாளர் அம்பேத்கர் 69 வது நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது

ஜெய் பீம்
டிசம்பர் 6.12.25 இன்று முக்கூடல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், முக்கூடல் வம்பளந்தான் முக்கு பகுதியில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 69 வது நினைவு நாளை ஒட்டி அவரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இதில் முக்கூடல் நகரச் செயலாளர் M.G. லாரன்ஸ் தலைமை தாங்கினார், சேரை ஒன்றிய செயலாளர் வே. மாதவன் முன்னிலை வகித்தார் மேலும் பேரூராட்சி துணைத் தலைவர் R. லட்சுமணன்,மைலப்புரம் திமுக கிளைச் செயலாளர் மாரி செல்வம்,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் ஆதிமூலம், இ.சி.எ.ப. மாவட்டத் துணை அமைப்பாளர் குமரேசன்,இ.சி.எ.ப. ஒன்றிய அமைப்பாளர் ஆண்ட்ரூஸ், பத்தமடை நகர செயலாளர் நடராஜன், பத்தமடை நகர துணை செயலாளர் வி.சாமுவேல், காரை பகுதி செயலாளர் நிஜாந்த், முகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்