கடந்த 3 ஆண்டுகளில் ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.9.74 லட்சம் ோகடி முதலீடுகள் ஈர்ப்பு 31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு முதல்வர் ஸ்டாலின் தகவல்!

சென்னை:“தமி­ழ­கத்­தில் கடந்த 3 ஆண்­டு­க­ளில் 31 லட்­சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்­கும் வகை­யில் 9.74 லட்­சம் கோடி முத­லீ­டு­கள் ஈர்க்­கப்­பட்­டுள்­ளன” எனமுதல்­வர் மு.க.ஸ்டாலின் தெரி­வித்­துள்­ளார்.தமி­ழக தொழில்­துறை சார்­பில் சென்­னை­யில் தமிழ்­நாடு முத­லீட்­டாளர்­கள் மாநாட்டை முதல்­வர்மு.க.ஸ்டாலின் இன்று(ஆக.21) தொடங்கி வைத்­தார். விழா­வில் பேசிய முதல்­வர் மு.க.ஸ்டாலின், “தமி­ழ­கத்­தில் கடந்த 3 ஆண்­டு­க­ளில் 9.74 லட்­சம் கோடி அள­வி­லான முத­லீ­டு­கள் ஈர்க்­கப்­பட்­டுள்­ளன. 31லட்­சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்­கும் வகையில் இந்த முத­லீ­டு­கள் ஈர்க்­கப்­பட்­டுள்­ளன.புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் போடப்­பட்­ட­தும் நமதுகடமை முடிந்­து­விட்­டது என தமி­ழக அரசு நினைப்­ப­தில்லை.மாநாடு நடத்­து­வதை­விட அதன்­மூ­லம்  வரும் முத­லீ­டு­க­ளில் தான் மாநாட்­டின் வெற்றி உள்­ளது.எனவே, இதை கட­மையாக நினைக்­கா­மல் தன்னார்­வத்­தோடு செயல்­படுத்­திக்காட்­டிக் கொண்டிருக்கிறோம் .இதில் தொழில்­துறை அமைச்­சர் டிஆர்பி ராஜாமற்­றும் தொழில்­துறை அதி­கா­ரி­க­ளின் பங்­க­ளிப்பு பாராட்­டுக்கு உரி­யது.இதன் தொடர்ச்­சி­யாக 19 வகை­யான திட்­டங்­களை இன்று நான் தொடங்கி வைத்துள்ளேன். ரூ.17,616 கோடி மதிப்­பி­லான இந்­தத் திட்டங்­க­ளின் மூலம் 64,968 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்­கும். தொழில் வளர்ந்­தால் மாநி­ல­மும் வள­ரும்; மக்­களின் வாழ்க்­கை­யும் வளரும்.அனைத்து மாவட்­டங்­களி­லும் தொழில் தொடங்­கு­வ­தன் மூலம் அத­னைச்சுற்­றி­யுள்ள பகு­தி­கள் வளர்ச்­சி­ய­டை­யும். பெண்­கள் பணி­பு­ரி­யும் மாநி­லத்­தில் பெண்­க­ளுக்­கா­கவே பல்­வேறு திட்­டங்­க­ளும்  உள்­ளன.தமிழ்­நாட்டு இளை­ஞர்க­ளின் திறமையை தொழில்­து­றை­யி­னர் பயன்ப­டுத்­திக் கொள்ள வேண்­டும்.தமிழ்­ நாட் ­டி ல் நிம்­ம­தி­யாக தொழில் தொடங்­க­லாம் என்ற நம்­பிக்கை தொழில் துறை­யி­ன­ருக்கு வந்­துள்­ளது.எனவே  இங்கே முத­லீடு செய்து தொழில் தொடங்கு­பவர்­கள் தமிழ்­நாட்­டின் தூது­வர்­களாக மாறி மற்ற தொழில் நிறு­வனங்­களை­யும் அழைத்­து­வர வேண்­டும். 2030 ஆம் ஆண்­டுக்­குள் ஒரு ட்ரில்­லி­யன் பொரு­ளா­தா­ரத்தை எட்டும் இலக்கை நோக்கி பய­ணிக்­கி­றோம்.” என்­றார்.