வக்பு திருத்த சட்­டத்திற்கு எதிராக திருச்­சியில் வி.சி.க. பிரம்மாண்ட பேரணி

திருச்சி, ஜூன் 15 வக்ஃபு திருத்­தச் சட்­டத்திற்கு எதிராக திருச்­சியில் விடுதலை சிறுத்­தை­கள் கட்சி சார்பில் பிரம்மாண்ட எழுச்­சிப் பேரணி நடை­பெற்றது. திருச்சி டி.வி.எஸ். டோல்­கேட் பகுதியில் தொடங்கி, சுமார் மூன்று கிலோ மீட்­டர் தூரத்திற்கு பேரணி நடை­பெற்­றது. இதனை முன்­னிட்டு,
வழி­நெ­டுகிலும் கட்சிக் கொடிகளும்,பிரம்­மாண்ட பேனர்­க­ளும் அமைக்கப்­பட்டிருந்­தன.
முன்­ன­தாக பேரணி தொடர்­பாக திரு­மா­வளவன் நடத்திய ஆலோ­சனை கூட்­டத்தில்,வி.சி.க. துணைப் பொதுச்செய­லா­ளரும் ,திருப்­போ­ரூர் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எஸ்.எஸ்பாலாஜி உள்­ளிட்ட கட்சி மேலிடபொறுப்­பா­ளர்கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மற்றும் நிர்­வா­கிகள் பங்­கேற்­ற­னர்.பேரணியின் ­போது வி.சி.க. தலைவர் திரு­மா­வளவன் திறந்த வாக­னத்தின் மீது பயணித்­தார். அப்­போது அவர் தொண்­டர்­க­ளு­டன் செல்பி எடுத்துக்கொண்­டார். வி.சி.கதுணைப் பொதுச் செய­லா­ளர்­கள் எஸ்.எஸ்.பாலாஜி, வன்­னியரசு உள்ளிட்­டோர் களப்­ப­ணியில் ஈடுபட்­டனர்.