மராட்டிய மாநில தேர்தலில்.. மக்கள் தீர்ப்பு!
மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது.பா.ஜனதா132இடங்களையும், சிவசேனா(ஷிண்டே)57இடங்களையும், தேசிய வாத காங்கிரஸ் 41,இடங்களையும் கைப்பற்றியது.காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 16இடங்களையும்,உத்தவ்சிவசேனா20இடங்களையும்,தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்)10இடங்களையும் பெற்றது.
இந்த தேர்தலில் விசிக தலைவர் எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தேர்தல் பரப்புரை செய்து வகையில் மலாடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் அணைத்து தமிழ் மக்களின் பேராதரவுடன் திரு.அஸ்லாம் சேக் நான்காவது முறையாக மீண்டும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
குட்டி தமிழ்நாடு என்று அழைக்கப்படும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமதி:ஜோதி கெய்க்வாட் அவர்களும் வெற்றி பெற்றுள்ளார் இவருக்காகவும் தொல்.திருமா அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடதக்கது.
மும்பையில் தமிழர் வெற்றி
சயன்கோலிவாடா சட்டமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் கேப்டன் தமிழ்செல்வன், காங்கிரஸ் சார்பில் கணேஷ் குமார் ஆகிய இரண்டு தமிழர்கள் இடையே கடும் போட்டி இருந்தது.இந்த தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்ட தமிழ் செல்வன் 7ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று3முறையாக தொகுதியினை தக்கவைத்து கொண்டது குறிப்பிடதக்கது.
மும்பையில் தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற்றார் தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன்
சயான் கோலிவாடா தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 7,500 வாக்குகள் வித்தியாசத்தில் தமிழ்ச்செல்வன் வெற்றி.
கேப்டன் தமிழ்செல்வன் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள பிலாவிடுதி என்ற ஊரை சார்ந்தவர்.இங்கும் இவரது வெற்றியினை சொந்த கிராமத்தில் மக்கள் கொண்டாடினர்.






