ஓமான் நாட்டு கடலில் சிக்கி தவித்த 4 குமரி மீனவர்கள் உட்பட 12 மீனவர்கள் பத்திரமாக இந்தியா வருகின்றனர்:விஜய் வசந்த் எம்.பி தகவல்

நாகர்கோ­வில் செப் 29 ஆழ்­க­ட­லில் மீன் பிடித்து கொண்டிருந்தபோ து படகு பழுத­டைந்து, வழி தவறிஓமான் நாட்டு எல்­லைக்குள் புகுந்த குமரி மாவட்­டத்தைசேர்ந்த 4 மீனவர்­கள் உட்­பட 12 இந்திய மீனவர்­கள் பத்திரமாக மீட்­க­பட்டு இந்தியாவிற்கு வருகின்­றனர் என கன்னியாகுமரிநாடாளுமன்ற உறுப்­பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். குமரி மாவட்­டத்தின் 4 மீனவர்­கள் உட்­பட இந்­திய மீனவர்­கள் 12 பேர் ஆழ்­க­ட­லில் மீன் பிடிப்­ப­தற்­காக அலங்­கார மாதா என்ற விசை பட­கில் சென்­ற­னர்.ஆழ்­க­ட­லில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்­கள் விசை படகு பழுத­டைந்து, மோசமான காலநிலை காரணம் கட்டுபாட்டை இழந்த படகு ஓமன் நாட்டு கடல் எல்­லைக்­குள் அடித்து செல்­லப்­பட்­டது. இதற்கு முன் வழி தவறி அந்­நிய நாட்டு கடல் எல்­லைக்குள் தவறுத­லாக செல்லும் நமது மீனவர்­கள் அந்­நாட்டு அரசால் கைது செய்­யப்பட்டு சிறை­யில் அடைக்­கப்படுவது வழக்­கம். அத்­தகைய சம்­ப­வம் மீண்டும் நடக்­கா­மல் இருக்க இம்­முறை மீனவர்­கள் கட­லில் தத்­த­ளிப்­பதை அறிந்த உடனே, வெளியுறவு துறை அமைச்­சர் மற்­றும் ஓமான் நாட்டில் உள்ள இந்திய தூத­ரகத்தை தொடர்பு கொண்டு அவர்­கள் நிலை­மையை எடுத்து கூறி அவர்­களை பத்­திரமாக மீட்க கோரிக்கை வைத்­தேன். ஓமான் அரசின் ஒத்துழைப்­பு­டன் நமது மீன­வர்­கள் மீட்­க­பட்டு பத்திர­மாக இந்தியாவிற்கு அனுப்பி வைக்­கப்­ப­டுகின்­ற­னர்.இந்திய கடற்­படை மற்றும் கட­லோர காவல்­படை உதவியு­டன் அக்­டோ­பர் முதல் நாள் இந்த 12 மீனவர்­களும் அவர்­கள் விசை படகும் கேரளா மாநி­லம் கொச்சி துறை­முகம் வந்­தடை­யும் வந்­த­டை­யும் என்ற மகிழ்ச்­சியான தகவலை தெரிவித்து கொள்­கி­றேன்.வெளியுறவுத்துறை அமைச்சகம், ஓமன் அரசு, தூதரக அதிகாரிகள், இந்திய கடற்படை மற்­றும் கட­லோர காவல்­ப­டைக்கு எனது நன்­றியை தெரிவித்து கொள்­கி­றேன். என குமரி பாராளு­மன்ற உறுப்­பினர் விஜய்வசந்த் தெரிவித்துள்­ளார