“தொடர் கொலைகளமாக மாறிவரும் அம்பாசமுத்திரம்! பீதியில் மக்கள்!!”

 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காக்கநல்லூர்,ராமச்சந்திரா புரத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாய கிராமத்தில் எவ்வித குற்ற பிண்ணனியும் இல்லாத”பிரபா சவுண்ட் சர்வீஸ்”உரிமையாளர், மாரியப்பன் (47) என்பவரை சமூக விரோதிகளால் 27-12-2025, அன்று இரவு சுமார் 7மணியளவில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதேபோன்று அன்று 2018 ஆம் ஆண்டு தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சார்ந்த எந்தவித குற்ற பிண்ணனியும் இல்லாத முப்புடாதி என்பவர் “சமூக நல்லிணத்திற்கு எதிராக செயல்படும்”சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்ற கொலைகள் தென் தமிழகத்தில் ஆங்காங்கே நடந்து வருவது தொடர்கதையாக உள்ளது. அதுமட்டுமல்ல, தேவேந்திர குல வேளாளர் சமுகத்தினரின் விளைநிலங்களையும் சமுக விரோதிகள் அவ்வப்போது சேதபடுத்தி வருவதாக தெரிகிறது.
அன்று முப்பிடாதி,இன்று மாரியப்பன், நாளை…!? யார் என்ற கேள்வியும் பயமும் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களிடையே அச்சத்தையும் பீதியினையும் ஏற்படுத்தியுள்ளது.
குற்றம் புரிந்தவர்களை அதிகாரபலம் மிக்க ஆளுமைகளால், காவல்துறையினரின் கைகள் விலங்கிடப்பட்டுள்ளதா என்ற அச்சமும் மேலோங்கி நிற்பதாக காக்கநல்லூர் மக்கள் புலம்புவதை கண்கூட பார்க்க முடிந்தது.
சாதிவெறியும், வரட்டுகௌரவமும் பார்க்கும் அதிகாரிகளின் மெத்தன போக்கினால் தான் தென் தமிழகத்தில் காவல் துறையின் இரும்பு கரம், வலுவிழந்து உள்ளதால் தான் படுகொலைகள் அவ்வப்போது நடப்பதாக பொது மக்கள் பகிங்கிரமாக குற்றம் சாட்டுவதை கேட்க முடிகிறது.
இனியேனும், தமிழக முதல்வரும், தமிழக அரசும் நேர்மையான முறையில் நீதி வழுவாது நடவடிக்கை எடுத்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தையும், ஒட்டு மொத்த தென்தமிழக மக்களையும், பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட சாதிவெறியர்களிடம் இருந்து மக்களை காக்க முன்வர வேண்டும்.
காக்கநல்லூர்,ராமச்சந்திரா புரத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் நான்கு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர் அதில் 1.கற்குளம் தெற்கு கரை ஓரமாக பாதை வேண்டும், 2.கொலப்பன் கோவில் அருகில் பாலம் அமைத்து தர வேண்டும் 3.அங்கன்வாடி மையத்தில் எங்கள் சமுதாய ஊழியரை நியமிக்க வேண்டும். 4.ரேஷன் பொருட்கள் எங்கள் தெருவில் தர வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்திக் கொண்டு வருகிறார்கள்.