ஸ்ரீமுஷ்ணம் அருகே ஸ்ரீபுத்தூர் கிராமத்தில் 15 நாட்கள் ஆகியும் டிரான்ஸ்பர்மரை சரி செய்யாத மின்வாரியம்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த ஸ்ரீ புத்தூர் கிராமத்தில் கடந்த 15 நாளுக்கு முன்பு ட்ரான்ஸ்பர் வெடித்ததாக கூறப்படுகிறது இதனை மின்வாரிய அதிகாரிகள் சரி செய்வதற்காக கடந்த 15 நாள் முன்புஎடுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது இதனால் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது அதோடு வேறு வழியில் மின்சாரம் கொடுத்ததாகவும் அது சரிவரை வீட்டிற்கு மின்சாரம் போதிய அளவு கிடைக்கவில்லை எனவும் இதனால் இரவு நேரங்களில் குழந்தைகள் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுவதாகவும் அதோடு குடிநீர் காலை அரை மணி நேரம் மட்டுமே குடிநீர் விடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுற்றி வருவதோடு இன்னும் ஓரிரு நாளில் மின்சாரம்
கொடுக்கப்படவில்லை என்றால் ஸ்ரீமுஷ்ணம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட போவதாக பொதுமக்கள் எச்சரித்து வருகின்றனர்






