பெண் டாக்டர் கொலை – தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது சுப்ரீம் கோர்ட்!

புது­டெல்லி, ஆக.19

மேற்கு வங்­கத்தின் கொல்­கத்­தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் 2ம்ஆண்டு மருத்துவ மேல் ­ப­டிப்புபடித்து வந்த 31வயது பயிற்சி பெண்டாக்­டர், கல்லூரிகருத்­த­ரங்கு அறையில்  கடந்த 9ம்தேதி சட­ல­மாகக் கண்­டெ­டுக்­கப்­பட்­டார். போலீ­சார் நடத்­திய விசார­ணை­யில் அந்­தப் பெண் பாலி­யல் வன்­கொ­டுமை செய்­யப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டது கண்­ட­றி­யப்­பட்­டது. சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் சஞ்­சய் ராய் என்­பவரை போலீ­சார் கைதுசெய்­த­னர். இந்த வழக்குசி.பி.ஐ.க்கு மாற்­றப்­பட்­ட­தால். தற்­போது சி.பி.ஐ.இந்த வழக்கின் விசார­ணையை நடத்தி வருகிறது.இச்­சம்­ப­வத்தை கண்டித்தும், டாக்­டர்­க­ளின் பாது­காப்பை உறுதி செய்­யக் கோரியும் மாநி­லம் முழுவதும் பயிற்சி டாக்­டர்­கள் தொடர் போராட்­டத்தில் ஈடுபட்டு வருகின்­ற­னர். இந்­தச் சம்­ப­வத்தில் தொடர்பு­டைய குற்­றவாளிகளுக்கு மரண தண்­டனை வழங்­கக் கோரி மேற்குவங்க முதல்மந்திரி மம்தாபானர்ஜி கொல்­கத்­தாவில் பேரணி நடத்தி­னார்.

இந்நிலையில்,பெண் டாக்­டர் பாலியல் வன்­கொடுமை செய்­யப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்ட விவ­காரம் குறித்து சுப்ரீம் கோர்ட் தாமாக முன் ­வந்து விசா­ரணை நடத்த முடி­வெ­டுத்துள்­ளது. அதன்­படி, இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட்,நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா,மனோஜ் மிஸ்ரா ஆகி­யோர் அடங்­கிய அமர்வில்ஆகஸ்ட் 20ம்தேதி விசாரணை நடத்­தப்­ப­டும் என அறி­விபட்டுக்­கப்பட்டுள்ளது.