2026 தேர்தலில் வெற்றி பெற்று தவெக வரலாற்று படைக்கும் தலைவர் விஜய் பேச்சு!

திமுகவுக்கு எதிரான கட்சிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என எடப்பாடி பழனிச்சாமியின் அழைப்பை தமிழக வெற்றிக் கழகம் நிராகரித்துள்ளது. தமிழகத்தில் பேரவை தேர்தலுக்குப் பின்னும் 10 மாதங்கள் இருக்கும் நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக பாஜக கூட்டணியும் முடிவாகியுள்ள நிலையில், நாம் தமிழர் தமிழக வெற்றிக்கழகம் ஆகியவை தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளன. இதனால் தமிழகப் பேரவை தேர்தலில் கிட்டத்தட்ட மும்முனை அல்லது நான்கு முனை போட்டி நிலவுகிறது. திமுகவுக்கு எதிரான ஒத்தக் கருத்துடைய நாம் தமிழர், தமிழக வெற்றிக்கழகம் ஆகியவையும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா? என்ற எதிர்பார்ப்பு களும் நிலவுகின்றன இந்த நிலையில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சார இயக்கத்தை தொடங்கி யுள்ள அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவுக்கு எதிரான ஒத்த கருத்துடைய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணி இணையலாம் என தெரிவித்து இருந்தார் தமிழக வெற்றி கழகத்தின் மாநில அளவி லான மாபெரும் கொள்கை விளக்க முதல் பொதுக்கூட்டம் சேலம் போஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்று சிறப்புரையாற்றினர் இந்தக் கூட்டத்தில் தவெக தனித்துப் போட்டியிட என முடிவு எடுத்துக் கப்பட்டுள்ளன மேலும் இது குறித்து தமிழக வெற்றி கழகம் தன்னுடைய பக்கத்தில் பதிவு ஒன்றே வெளி யிட்டது வெளியிட்டுள்ளது இந்த பதிவில் மாற்றத்தை விரும்பும் தமிழக மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் வெற்றி தலைவர் விஜய் தலைமையில் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றி கழகம் மிகப்பெரிய வெற்றியை பெற்று புதிய வரலாறு படைக்கும் என பதிவிட்டுள்ளது.