எய்ட்ஸ் தடுப்பு திட்ட அலகு மற்றும் சேரன் மகாதேவி பாலாஜி நர்சிங் கல்லூரி இணைந்து இன்று உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி!

இன்று 4.12.2024 மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட அலகு மற்றும் சேரன் மகாதேவி பாலாஜி நர்சிங் கல்லூரி இணைந்து இன்று உலக எய்ட்ஸ் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மற்றும் மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. சேரன் மகாதேவி சார் ஆட்சியர் அரபித் ஜெயின் ஐ ஏ எஸ் கலந்து கொண்டு உறுதி மொழி ஏற்பிற்கு தலைமை தாங்கினார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேற்பார்வையாளர் ஜெயக்குமார் சேரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாந்தி,சேரன் மகாதேவி வட்டார மருத்துவ அலுவலர் ரமேஷ், சேரை வட்டாட்சியர் வின்சென்ட், நம்பிக்கை மைய ஆலோசகர்கள் ஞன துரை மரிய செல்வம், செல்வராஜ், கருப்பசாமி, ஆய்வக நுட்பனர்கள் மோகன், தேவி வேலம்மாள் கிராமோதயா தொடர்பு திட்ட பணியாளர்கள் சூர்யா, ராஜன், சகுந்தலா, இந்திராகாந்தி பீஸ் அறக்கட்டளை பெருமாள் சிவ ரஞ்சனி, ஆதி, வேல் துறைச்சி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.  நிகழவில் பாலாஜி செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட மனித சங்கிலி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பின்னர் சார் ஆட்சியர் தலைமையில் பேரணி தொடங்க பட்டு பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. மாணவர்கள் கலந்து கொண்ட வீதி நாடகம் நடைபெற்றது.