கரைபுரண்டு ஓடும் தென்பெண்ணை ஆறு!ஊருக்குள் புகுந்த வெள்ளம்!!

கரைபுரண்டு ஓடும் தென்பெண்ணை ஆறு!ஊருக்குள் புகுந்த வெள்ளம்!!
—————————————
பெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் அபாயகுறிக்கு மேல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அதே போன்று தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான துரிஞ்சல் ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றின் கரையோரம் உள்ள மணம் பூண்டி,கோட்ட மருதூர்,தேவனூர், கொடுக்கப்பட்டு ஆகிய கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கோட்ட மருதூர் கிராமத்தில் மக்கள் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த நேரத்தில் அதிகாலை 4மணியளவில் கோட்ட மருதூர் தேவனூர் ரோடு வழியாக உள்ளே புகுந்த வெள்ளநீரால் மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.
தனித்தீவு போன்று,கோட்டமருதூர், கொடுக்கப்பட்டு ஆகிய கிராமங்களும்,நான்கு பக்கம் நீரால் சூழப்பட்டு தனித்தீவு போன்று ஆதிச்சனூர், நாவந்தாங்கல்,அரசங்குப்பம்,  வசந்த கிருஷ்ணாபுரம் ஆகிய கிராமங்களும் காட்சியளிக்கிறது. வரலாறு கானாத அளவில் மழையும்,பெண்ணையாற்றின் வெள்ள நீரும்,துரிஞ்சல் ஆற்று வெள்ளமும் ஒரே நேரத்தில் வெகுண்டெழுந்து பாய்ததினால் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சி புரம் வட்டத்தின் மேற்கு பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப் பட்டுள்ளனர்.இந்த நிலையில் கொட்டும் மழையினையும், சீரிபாய்ந்து ஓடும் வெள்ளத்தினை யும் பொருட்படுத்தாமல் பாதிக்கப் பட்ட மக்களுக்கு களத்தில் இறங்கி கோட்ட மருதூர் கிராம நிர்வாக அலுவலர்(VAO),விஜயகுமார் அவர்கள், ஆறுதல் கூறியும், உதவிகளை செய்து வருவது”மனித நேயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு “இவரை போன்று அணைத்து அதிகாரி களும் களத்தில் இறங்கி பாதிக்கப் பட்ட மக்களுக்கு உடனடி தேவை யான உதவிகளை செய்ய வேண்டும் என்று வேண்டுகின் றோம்.அண்மை செய்தி..கோட்ட மருதூர் ஊராட்சி மன்ற நிர்வாகமும் பாதிக்கப்பட்ட ஊராட்சிக்குட்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
“தமிழன் உதயம்” செய்திகளுக்காக:M.அல்போன்ஸ், விழுப்புரம் மாவட்டம்,