துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

தமிழ்நாடு முதலமைச்சர், கழக தலைவர், தங்க தளபதி ஆணைக்கிணங்க,
திருநெல்வேலி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணாச்சி இரா.ஆவுடையப்பன் அவர்கள்
ஆலோசனையின்படி,தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.பிரபாகரன் வழிகாட்டுதலின் படி

தமிழக துணை முதல்வர் தி.மு.கழக இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் ஆண்டு தோறும்கொண்டாடபட்டு வருவது வழக்கம்.அதேபோல், இந்த ஆண்டு 27.11.2024 இன்று பிறந்த நாள் விழாவை,

பேரூர் கழக செயலாளர் வீ.சுப்பையா தலைமையில்,
பேருராட்சி மன்ற தலைவர்
திருமதி சித்ரா அறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இரு வண்ண கொடியேற்றி , பட்டாசு வெடித்துபொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர் முதியோர் இல்லத்திற்கு சென்று காலை உணவு இனிப்பு வழங்கி பட்டது,அதன் பிறகு கடையம்மன் கோவிலிருந்து பஸ்ட்டாண்ட் வரை உள்ள வியாபாரிகளுக்கும் பொது மக்களுக்கும் இனிப்பு வழங்கப் பட்டது, 11 அங்கன்வாடி பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், பென்சில்கள், கிரையான்சுகள், வழங்கப்பட்டது, காந்தி சிலை அருகில் உள்ள கடை களுக்கும் மற்றும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கப் பட்டன,வீரவநல்லூர் பேருந்து நிலையத்தில் வைத்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது, வார்டுகள் வாரியாக விளம்பரப் பேனர்கள் வைக்கப்பட்டது, இன் நிகழ்ச்சியில் மாவட்ட சார்பு அணிகள், கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதி கள்,கவுன்சிலர்கள், கழக முன்னோடிகள்,மகளிர் அணிகள், மாணவர் அணிகள், இளைஞர் அணிகள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.