தேவேந்திரகுல வேளாளர் எழுச்சி இயக்கத்தின் சார்பாகவும் திருச்சி மாவட்ட மக்கள் சார்பாகவும் இன்று 07-11-2024- ல் திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையரிடம் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களுக்கு தமிழக அரசால் மணிமண்டபம் கட்ட அரசாணை வழங்கியது.
அதன்படி தமிழக அரசின் அரசாணையை நிறைவேற்றிட தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவிடத்தின் அருகில் மணி மண்டபம் கட்ட பரமக்குடி நகராட்சி மணி மண்டபத்தினை கட்டி வருகின்றது அதனை ஏற்றுக்கொள்ள முடியாத பல நபர்கள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு மணி மண்டபத்தினை கட்ட கூடாது என்று பரமக்குடியை சேர்ந்த குணசேகரன் என்பவர் மதுரை உயர் நிதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ததில் தியாகி இமானுவேல் சேகரனார் தியாகி அல்ல என்றும் அவர் சமுதாய தலைவர் என கருத்தை பதிவு செய்ததால் அனைத்து தேவேந்திரகுல வேளாளர் மக்களை இழிவு படுத்தும் எண்ணத்திலும் அனைத்து சமுதாய மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் செயலை கண்டித்து அனைத்து மக்கள் சார்பாகவும் இன்று திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் அவர்களிடம் புகார் மனு
கொடுக்கப்பட்டதில் மேற்படி நபர்களை அழைத்து விசாரணை செய்து குற்ற நடவடிக்கை மேற்கொள்ளும்படி புகார் மனுவினை அளித்தனர் .இதில் வழக்கறிஞர் ஒ முத்துவேல், வாசுதேவன், ராஜசேகர் மற்றும் கொண்டயம்பேட்டை ரவிசங்கர், கார்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
திருச்சி மாவட்ட காவல்துறை ஆணையர் அவர்களிடம் புகார் மனு!






