வயநாட்டில் ட்ரோன்கள் பறக்கத் தடை.. முழுவீச்சில் மீட்புப்பணிகள்.. உயரும் பலி எண்ணிக்கை!

நிலச்சரிவால் உருக்குலைந்துள்ள வயநாட்டில் இந்திய கடற்படை மற்றும் விமானப்படை விமானங்கள் தணிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளன. விமானங்கள் ஹெலிகாப்டர்கள் முழு வீட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கொட்டி தீர்த்த கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மண்ணில் உயிருடன் புதைந்தனர். இந்நிலையில் ராணுவம் கடற்படை விமானப்படை தேசிய பேரிடர் மீட்பு படை கடலோர காவல் படை காவல்துறை தீயணைப்பு துறைக்கு உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஐந்தாவது நாளாக இன்றும் வீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 340க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் மாயமானவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ராணுவத்துடன் இணைந்து இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவும் மீட்பு பணிகள் ஈடுபட்டுள்ளது. தெர்மல் ஸ்கேனர் உதவியுடன் மண்ணில் புதயுண்டவர்களை கண்டுபிடிக்கும் பணிகளை கேரள அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் காணாமல் போனவர்களின் செல்போன்கள் கடைசியாக காட்டியாக சிக்னலை வைத்து மோப்ப நாய்கள் உதவியுடன் தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மீட்பு பணிகளில் 40 குழுக்கள் தீவிர தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் இருந்தும் நான்கு மோப்ப நாய்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. அவர்களின் எண்ணிக்கை 346 ஆக உயர்ந்துள்ளது.
மண்ணில் புதைவண்டவர்களை இனிமேல் உயிரோடு மீட்பது சாத்தியம் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை உயிருடன் மீட்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமான தொண்டு நிறுவனங்களும் அவர்களுக்கு உதவிகளை செய்து வருகின்றன. இதனிடையே வயநாடு பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்படை மற்றும் விமானப்படை விமானங்கள் தணிக்கை பணிகளில் ஈடுபட்டுள்ளன. விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் முழு வீட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதால் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி பகுதிகளில் நண்பகல் 12 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை மற்றும் விமான படை நிலச்சரிவு குறித்த தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *