வயநாடு:
“கேரளா தனித்து விடப்படவில்லை. வயநாடு நிலச்சரிவால் பாதிப்புகளுக்கு
சாத்தியமானஅனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்”
வயநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி உறுதி அளித்துள்ளார்.
கேரளாவின் வயநாடுமாவட்டத்தில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட
பகுதிகளை நேற்று (சனிக்கிழமை) நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர
மோடி, வீடுகளை இழந்துமுகாம்களில் தங்கியுள்ள மக்களைச் சந்தித்து
ஆறுதல் தெரிவித்தார்.இதனையடுத்து, பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக்
கூட்டம் நடைபெற்றது.இதில், கேரள ஆளுநர்ஆரிப் முகம்மது கான்,
முதல்வர் பினராயி விஜயன், கேரளாவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர்
சுரேஷ் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில்,
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிவாரண
உதவிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.இந்தக் கூட்டத்தில் பேசிய
பிரதமர் நரேந்திரமோடி, “நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில்
பார்வை யிட் டபோதும், பாதிக்கப் பட்ட மக்களை சந்தித்த போதும்என்இதயம்
கனத்துவிட்டது. மறுவாழ்வுப்பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டிய
தருணம் இது. கேரளாதனித்து விடப்பட வில்லை.ஒட்டுமொத்த தேசமும்
கேரள மக்களோடு இருக்கிறது. சாத்தியமான அனைத்துஉதவிகளையும்
மத்திய அரசு செய்யும்.பாதிக்கப்பட்ட மக்களுக்குநான்ஒன்றுசொல்ல விரும்புகிறேன்;
நீங்கள்தனித்து விடப்படவில்லை. மத்திய அரசும் கேரள அரசும் இணைந்து
வயநடடை மீட்டுருவாக்கும் பணிகளை மேற்கொள்ளும்.மறுவாழ்வுப்பணிகளுக்கு
நிதி ஒருபோதும் தடையாக இருக்காது. மாநில அரசு முன்வைக்கும் அனைத்து
கோரிக்கைகளையும் மத்திய அரசுநிறைவேற்றும்” என்று பிரதமர் மோடி
தெரிவித்தார்.முன்னதாக, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவால்
பாதிக்கப்பட்ட பகுதிகளையும்,பாதிக்க ப்பட்ட மக்களை யும் பார்ப்பதற்காக
விமானம் மூலம் இன்று காலை கேரளாவின் கண்ணூர் விமான நிலையம் வந்த
பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து இந்திய விமா னப்படையின் ஹெலி காப்டர்
மூலம் காலை 11.15 மணியளவில் வய நாடு புறப்பட்டார்.வயநாடு மாவட்டத்தில்
நிலச்சரிவால் பாதிக்கப் பட்ட சூரல்மாலா, முண் டக்கை, புஞ்சிரிமட்டம்
ஆகிய கிராமங்களில்அவர் வான்வழி ஆய்வு மேற்கொண்டார். நிலச்சரிவை
அடுத்து கல், மண் ஆகியவற்றோடு பெருக்கெடுத்து ஓடிய இருவழிஞ்சி
ஆற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது,ஒவ்வொரு பகுதியிலும்
ஏற்பட்ட பாதிப்பின் தன்மை குறித்து பிரதமர் மோடிக்கு விளக்கப்ப ட்டது.
மேலும்,பாதிப்புகள் குறித்த புகைப்படங்க ளையும் டேப் மூலம் பிரதமர் மோடி
பார்த்தார்.இதனையடுத்து, தரை மார்க்கமாகவும் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு
பிரதமர் நரேந்திர மோடி சென்றார். வாகனத்தை விட்டு பல பகுதிகளுக்கும்நடந்து
சென்ற பிரதமர் மோடி,அங்கு நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நெருக்கமாக ஆய்வு செய்தார்.அப்போது, அங்கு ஏற் பட்ட பாதிப்புகள் குறித்துபிரதமருக்கு அதிகாரிகள் விளக்கினர்.இந்த ஆய்வை அடுத்து,நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வர்கள் தங்கவைக்கப்பட்டள்ள முகாம்களுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக்
கேட்டறிந்தார்.அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களில் சிலர் தங்கள் குறை களை கண்கலங்கியவாறு
கூறியதைக் கேட்ட பிரதமர், அவர்களின் தோல்க ளில் தட்டிக் கொடுத்து
ஆறுதல் தெரிவித்தார்.இத னைத் தொடர்ந்து நிலச்சரி வால் பாதிக்கப்பட்டு
ம ரு த் து வ ம னை யி ல் சிகிச்சை பெற்று வருபவர் களை பிரதமர் சந்தித்து,
அவர்களுக்கு ஆறுதல்தெ ரி வி த்தா ர் .பிரதமருடன் கேரள ஆளுநர்
ஆரிப் முகமது கான்,முதல்வர் பினராயி விஜயன், மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி ஆகியோர்உடன் சென்றனர்.பேரிடர் பாதித்த பகுதியில்
மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளமத்திய அரசிடம் கேரளஅரசு ரூ.2,000 கோடி நிதியுதவி கோரி இருப்பது குறிப்பிடத்தக்கது.






