கொடைக்கானலில் போலி டாக்டரிடம் சிகிச்சை பெற்ற இளம் பெண்மரணம் குழந்தை பிறந்த 20 நாளில் சோகம்

திண்­டுக்­கல் நவ.23 திண்­டுக்­கல் கொடைக்­கா­னல் அரு­கில் உள்ள கவுஞ்சிராஜ­பு­ரத்தை சேர்ந்­த­வர் பிரி­ய­தர்­ஷினி (24). இவ­ருக்கு 1 ஆண்­கு­ழந்தை உள்ளது.இந்­நி­லை­யில் மீண்­டும் பிரி­ய­தர்­ஷி­னிக்கு 20நாட்­க­ளுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தைபிறந்­தது. அதன் பிறகு அவர் வீடுதிரும்­பி­னார். சில நாட்­க­ளி­லேயே பிரி­ய­தர்­ஷி­னிக்கு வயிற்று வலி ஏற்­ப­டவே அதே பகு­தி­யில் மருந்­தகம் நடத்தி வரும்பிரின்ஸ் என்­ப­வ­ரி­டம் சிகிச்­சைக்கு சென்­றார். அவ­ருக்கு மருந்து மாத்­தி­ரைகளை பிரின்ஸ் வழங்கி உள்­ளார். இந்­நி­லை­யில் நேற்று மீண்டும் ­வ­யிற்று வலி ஏற்­ப­டவே பிரின்ஸ்­சி­டம் சிகிச்­சைக்கு வந்­துள்ளார்.அவர் வலிகுறை­வ­தற்­காக அதிக வீரி­யம் கொண்ட ஊசியை அவ­ருக்கு செலுத்­தி­னார்.சற்று நேரத்­தில் பிரி­ய­தர்ஷி­னிக்கு மூச்­சுத் திண­றல் ஏற்­பட்­டது உட­ன­டி­யாக கொடைக்­கா­னல் அரசு ஆஸ்­பத்­தி­ரிக்கு சிகிச்­சைக்கு கொண்டு வந்­த போதுஅவர் வழி­யி­லேயே பரி­தா­பமாக உயி­ரி­ழந்­தார்.இது­கு­றித்து கொடைக்­க­னால் போலீ­சா­ருக்குதக­வல் தெரி­விக்­கப்­பட்­டது போலீ­சார் பிரி­ய­தர்­ஷினி உடலைபிரேத பரி­சோதனைக்­காக திண்­டுக்­கல் அரசு மருத்­து­வ­மனைக்கு அனுப்பிவைத்து விசா­ரணை மேற்கொண்ட ­னர் விசா­ர ­ணை­யில் பிரின்ஸ் முறையான மருத்­து­வம் படிக்­காமல் தனதுவீட்­டி­லேயே கிளீ­னிக் போல நடத்தி அப்­ப­குதி மக்­க­ளுக்கு மருந்து மாத்­திரை கொடுத்து வைத்­தி­யம் பார்த்து வந்­துள்­ளார் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது தற்போது பிரின்ஸ் சிகிச்­சை­யால் ஒரு பெண்உயி­ரி­ழந்த சம்­ப­வத்தை தொடர்ந்து அங்கு போலீ­சார் மற்­றும் மருத்­துவதுறை­யி­னர் விசா­ர­ணையை தொடங்கி உள்ள­னர்.