தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் சேர்மாதேவி வட்டம் தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர் சங்கத்தின் சார்பாக தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில சங்கத்தின் முடிவுப்படி நீண்ட நாள் கோரிக்கைகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் 25/11/2024 மாலை 5:30 மணிக்கு சேரன்மகாதேவி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் 4/12/ 2024 மாலை 5:30 மணிக்கு சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும் 13/12/2024 மாலை 5:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமைதியாக முறையில் கவன இருப்பு ஆர்ப்பாட்டமும் 7/2/2025 அன்று காலை 9 மணி அளவில் மாநில தலைநகர் சென்னை சேப்பாக்கம் எழிலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாளம் உண்ணாவிரத போராட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டம் சேரன்மாதேவி வட்டம் கிராம உதவியாளர்கள் முழுமையாக போராட்டத்தில் கலந்து கொள்வதன தீர்மானம் நிறைவேறப்பட்டது.
இக்கூட்டத்திற்கு சேரன்மகாதேவி வட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலையில், மாவட்ட மகளிர் அணி தலைவி கனக லட்சுமி வரவேற்புரை, மாநிலத் தலைவர் முத்தையா, மாநில செயலாளர் பிச்சு குட்டி, மாநில செயலாளர் நாராயணன், மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கோபால், மாவட்ட பொருளாளர் முகமது ரபிக்,
மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார், மாவட்டத் துணைத் தலைவர் மாரிமுத்து, அம்பை வட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட மகளிர் அணி பொருளாளர் சுப்புலட்சுமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் கூட்டத்திற்கு வட்டத் தலைவர் அண்ணாதுரை வட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் வட்ட பொருளாளர் சேதுராமனந்தம் மற்றும் பல கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.






