திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் செயல்பட வில்லை என புரட்சி பாரதம் கட்சி குற்றச்சாட்டு
புரட்சி பாரதம் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் ஏ.கே.நெல்சன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செய்தியாளர் சந்தித்தார் இதில் அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை எனவும் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரவும் ஆதிதிராவிடர் நலத்துறை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், நஞ்சை நிலத்தில் வீடு கட்ட அனுமதி வழங்கிய சேரன்மகாதேவி பேரூராட்சி செயல்அலுவலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், முறைகேடாக பட்டா வழங்கிய சேரன்மகாதேவி வருவாய்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் பேட்டியின் போது உடன் தமிழக மக்கள் முன்னேற்றக்கழக மாநகர் மாவட்ட செயலாளர் துரைப்பாண்டியன், இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, ஆதித்தமிழர் முன்னேற்ற கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் கலைக்கண்ணன், புரட்சி பாரதம் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






