தொடர் தோல்விகளால் அழிவின் பிடியில் உள்ள அதிமுகவை மீட்போம்!

கூட் டணி பற்றி பேசக்கூடாது :
நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் வாய்ப்பூட்டு!!

சென்னை, ஆகஸ்ட்.04 – அரசியல் கூட்டணி குறித்த கருத்துகளை தவிர்க்குமாறு கழக நிர்வாகிகள்
மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுப்பத£க அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டு ள்ள அறிக்கையில், ‘எம்.ஜி.ஆரால் தோற்று விக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத் திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தொடர் தோல்விகளை சந்தித்து மக்களின் நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.எம்.ஜி.ஆரால் தோற்று விக்கப்பட்டு,ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை துரோகக் கூட்டத்திட மிருந்து மீட்டெடுப்பதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை ஏற்படுத்தி நாம் போராடி வருகிறோம்.இதில் நீதிமன்றத்திலும்,மக்கள் மன்றத்திலும் நமக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்கிறது. இந்தச்சூழ்நிலையில், வருகின்ற தமிழ்நாடு சட்ட மன்றப் பொதுத் தேர்தலை நாம் எதிர் கொள்ளும் வகையில், எம்.ஜி.ஆரால் நிகழ்த் தப்பட்ட சாதனைகளையும், ஜெயலலிதாவால் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் பட்டி, தொட்டி எங்கு எடுத்துச்செல்லவும், தி.மு.க. ஆட்சியில் தற்போது மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் மற்றும் தமிழ்நாட்டிற்கு எதிரான மத்திய கூட்டணி பற்றி பேசக்கூடாது : அரசின் செயல் பாடுக ளை  மக்களிடம் எடுத்துச் செல்லவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அழிவுப் பாதையில் அழைத்துச் செல்லப்படுவதை மக்களுக்கு எடுத்துக் காட்டவும் பொதுக கூட் டங்களை கழக நிர்வாகிகள் ஆங்காங்கே நடத்த வேண்டு மென்று அன்போடு கேட்டுக்கொள்கி றேன். மேலும், தொலைக் காட்சி விவாதங்களில் பங்கேற்கும் செய்தித் தொடர்பாளர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எந்தக் கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அன்புடன் வேண்டு கோள்விடுக்கிறேன். இதனை மீறிச் செயல் படுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.கூட்டணி குறித்த முடிவு தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச்செயலாளர்கள் உள்ளிட்டவர்களின் கருத்தினைக் கேட்டு, கள நிலவரத்தை ஆராய்ந்து, அதற்கேற்பதக்க நேரத்தில் உரியமுடிவு எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ எனத்தெரிவித்துள்ளார்.