கடனாநதி அணை, பொட்டல்புதூர்முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், குற்றாலம் நீர்வீழ்ச்சி, கீழப்பாவூர் பெரியகுளம் பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு

தென்காசி, நவ.15 தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தொடர்பான பணிகளை
மேம் படுத்துவதற்காகவும்,வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதற்காகவும் கடனாநதி அணை,பொட்டல் புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல், குற்றாலம் நீர் வீழ்ச்சி மற்றும் கீழப்பாவூர் பெரியகுளம் போன்ற பகுதிகளில்(13.11.2024) அன்று
மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர்,தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.
இராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.இந்த ஆய்வின் போது,சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பேரில்,தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம் படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் களஆய்வு செய்து தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.அந்த வகையில் தென்காசி மாவட்டம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மாவட்டமாகும்.இங்கு தென்காசி காசிவிஸ்வநாதர் கோவில்.இலஞ்சி குமாரர்
கோவில், பண்பொழி திருமலைக்கோவில்,அச்சன் கோவில் போன்ற பிரசித்தி பெற்ற கோவில்களும், குற்றாலஅருவி, பழைய குற்றாலம்,புலியருவி, ஐந்தருவி
போன்ற அருவிகளும் நிறைந்து காணப்படும் மாவட்டமாகும்.தென்காசி மாவட்டம்,
வட்டம் தர்மாபுரம் மடம் கிராமத்தில் அமைந்துள்ள கடனாநதி அணை ஆழ்வார் குறிச்சி பேரூராட்சி பகுதிக்கு பிரதான குடிநீர் அமைப்பாக இருந்து வருகிறது. கடனாநதி அணை பூங்காவினை பார்வையிட வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் புதிதாக பூங்காவின் நுழைவுச் சீட்டு
வளாகம் அமைத்தல்,வாகனம் நிறுத்தும் இடம் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்லவும் வெளியேற்றும் பாதையை அகலப்படுத்துதல், உணவுக் கூடங்களை
மேம் படுத்துதல், குடிநீர்மற்றும் சுகாதார பணிகளை மேம்படுத்துதல், விளை யாட்டு உபகரணங்கள்,இசை நீரூற்றுகள், மாற்றுத் திறனாளிகளுக்கான பேட்டரி வாகனம் மற்றும் குப்பைகளை மறு சுழற்சி ஏற்பாடுகள் போன்றவைகளை மேம் படுத்துவது குறித்தும்,பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில்
ஆண்டு தோறும் நடைபெறும் கந்தூரி விழாவிற்கு வெளிமாநிலங்களிலிருந்து
பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை புரிவதால் அனைவரும்தங்குவதற்கு ஏதுவாக,தங்கும் விடுதி, கழிப்பிடம் மற்றும் பார்க்கிங் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைப்பது குறித்தும்,குற்றாலத்தில் சீசன் காலங்களில் அனைத்து ஊர்களிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும்,வெளிநாட்டிலிருந்தும் மக்கள் வருகை புரிந்துகுற்றாலச்சாரலினை அனுபவித்துச் செல்வர்.இங்கு சுற்றுலாத்துறை சார்பாக சாரல் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.சாரல் திருவிழாவில் ஒவ்வொரு நாட்களிலும் கலை நிகழ்ச்சிகளும்,போட்டிகளும் நடைபெறும்.பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு கண்டு மகிழ்ந்து செல்வர்.எனவே குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாபயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும்,மேலும்கீழப்பாவூர் பேரூராட்சிக்குட்பட்ட பெரியகுளத்தில் புதிதாக படகு குழாம் அமைப்பதற்கான பணியினை நேரில் பார்வையிட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, சுரண்டைநகர் மன்ற உறுப்பினர் வே. ஜெயபாலன், செயற்பொறியாளர் (சிற்றாறுவடி நிலக்கோட்டம்)
தனலெட்சுமி, உதவி செயற் பொறியாளர் சுப்பிரமணிய பாண்டியன்,உதவிப் பொறியாளர் உமாபதி, கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன்,
ராதாகிருஷ்ணன், சுற்றுலா அலுவலர் சீனிவாசன்,குற்றாலம் செயல் அலுலர் சுஷ்மா, தென்காசி வட்டாட்சியர் ராம்குமார்,கீழப்பாவூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ராஜன் மற்றும் அரசுஅலுவலர்கள், உள்ளாட்சிஅமைப்புகளின் பிரதி நிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.