நெல்லை அருகே பேட்டை செக்கடி பகுதியை சேர்ந்த முத்துகுமார் (41), அந்த பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2024ம் ஆண்டு, 6 மற்றும் 7 வயதுடைய 2 சிறுமிகளுக்கு இவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இதுகுறித்தான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், குற்றம் உறுதியானதால் அவருக்கு 16 ஆண்டுகள் சிறை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை.. டீ மாஸ்டருக்கு 16 ஆண்டுகள் சிறை






