சிவகங்கை மாவட்ட எஸ். பி. காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!

சென்­னை ­ஜூலை.02 – சிவகங்கை மாவட்­டம் திருப்பு­வனத்தை அடுத்த மடப்புரம் பத்­திர­காளியம்­மன் கோவிலில் காவ­லா­ளியாக பணி­யாற்­றியவர் அஜித்கு­மார் (வயது 28). தங்க நகை திருட்டு வழக்கு தொடர்­பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்­லப்­பட்­டார். அப்­போது அவர் உயிரி­ழந்­தார்.இந்த சம்­ப­வம் தமிழகத்­தில் பரப­ரப்பை ஏற்­ப­டுத்தி உள்­ளது. இது தொடர்­பாக 5 போலீஸ்­காரர்­கள் கைது செய்­யப்­பட்ட­து­டன், அவர்­கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த நிலை­யில்,திருப்புவனம் வாலி­பர் மர­ணம் தொடர்­பாக சிவகங்கை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் காத்திருப்­போர் பட்­டிய­லுக்கு மாற்­றம் செய்து தமிழக அரசு உத்த­ரவிட்­டுள்­ளது. மேலும் ராமநா­தபுரம் எஸ்.பி.சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்.பி. பொறுப்பை கூடுத­லாக கவனிப்­பார் என தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது.