‘இபிஎஸ் உடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்’: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: அதி­முக பொதுச் செய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சா­மி­யு­டன் நேருக்கு நேர்விவா­திக்க தயார், என்று துணை முதல்­வர் உத­ய­நிதிஸ்டாலின் கூறி­யுள்­ளார்.ரூ.15 கோடி மதிப்­பில் ராணிப்­பேட்டை மாவட்­டத்­தில் ‘மாவட்ட விளை­யாட்டு வளா­கம்’ அமைத்­தி­ட­வும், மதுரை மாவட்டவிளை­யாட்டு வளா­கத்­தில் ரூ.6 கோடி மதிப்­பில்‘ஒலிம்­பிக்அகா­டமி’தொடங்­க­வும் சென்­னையில் நேற்று (நவ.11)நடைபெற்ற அரசு விழா­வில் காணெளி வாயி­லாக துணை முதல்­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அடிக்­கல் நாட்­டி­னார்.பின்­னர் துணை முதல்­வர் உத­ய­நிதி ஸ்டாலின் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­தார். அப்போது அவ­ரி­டம்,யாரு­டைய ஆட்­சிக் காலத்­தில் மக்­கள் நலத்­திட்­டங்கள் கொண்டு வரப்­பட்­டன என்­பது குறித்து நேருக்கு நேர் விவா­திக்கதயாரா? என்று அதி­முக பொதுச் செய­லா­ளர் எடப்­பாடி பழ­னி­சாமி முதல்­வ­ருக்கு கேள்வி எழுப்­பி­யி­ருப்­பது தொடர்­பாக கேட்­கப்­பட்­டது. அதற்கு பதி­ல­ளித்த அவர்,“என்னை கூப்­பிட்­டால் நான் செல்­வேன்.” என்­றார்.தொடர்ந்து பல திட்­டங்க­ளுக்கு கரு­ணா­நிதி பெயர்சூட்­டப்­ப­டு­வதாக எடப்­பாடி பழ­னி­சாமி குற்­றம்­ சாட்­டு­வது தொடர்­பாக கேட்­கப்­பட்ட கேள்­விக்கு,“வேறுயார் பெயரை வைக்­க­லாம்?என்று விமர்­சனம் வரத்­தான் செய்யும். யார்பெயரை வைக்க வேண்­டுமோ, அவர் பெய­ரைத்­தான்  வைக்க வேண்­டும். கூறி­னார்.