மகளிர் சுயஉதவி குழு தலைவி ரூ.50 லட்சம் வங்கியில் கடன் பெற்று தலைமறைவு; பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பியிடம் புகார்!

நாகர்­கோ­வில் நவ09,
கன்னியாகுமரி மாவட்­டம் கொட்டாரம் அச்­சன்கு­ளம் பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்ப்­பட்ட பெண்­கள்கன்னியா குமரி மாவட்ட காவல் கண்காணிப்­பா­ளரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அழித்­த­னர். அந்தமனுவில் கூறப்­பட்­டுள்­ள தாவது: கன்னியாகுமரி மாவட்­டம் கொட்டா ரம் அச்­சன்கு­ளம்பகுதியை சேர்ந்த தங்க சுஜிதா (41) இவரது இரண்­டாம் கணவர் ராமசந்திரன் , மகள் ஷாஜினி (21), மகன் (அபி­னேஷ்), ஆகி­யோர் எங்­கள் ஊரான அச்­சன் கு­ளம் பகுதி­யில் வசித்து வந்­த­னர். தங்க சுஜா எங்கள் ஊரில் பல மக­ளிர் சுய உதவி குழுக்க­ளுக்கு தலை­வியாக இருந்து வந்­தார். மேற்ப்­படி இவர்­களுக்கு ஆதரவாக இரண்டு தனியார் வங்கி கிளை மேலா­ளர்­கள் தலை­மை­யில் நடை­பெற்று வரும் குழுக்­களுக்­கும் தங்­கசுஜிதா தான் தலைவி ஆவார். நாங்­கள் அனை­வ­ரும் உறுப்பினர்­க­ளாக இருந்து வந்­தோம். தங்க சுஜிதா மக­ளிர் சுய உதவிக் குழுக்­களின் கூட்­டங்­களின் போது எங்­களி­டம் ஆதார் கார்டு,ரேஷன் கார்டு மற்­றும் எங்­க­ளது கையெ­ழுத்தை வாங்கி வைத்த துக் கொண்டு எங்­க­ளது கையெ­ழுத் தை போலியாக பயன்­ ப­டுத்தி சுமார் ரூ 50 இலட்­சத்திற்க்கு அதி­கமாக கடன் பெற்­று விட்டு தவணை தொகையினை கட்­டா­மல் இருக்­கவே வங்கி ஊழியர் ­கள் எங்­க­ளது வீட்­டிற்க்கு வந்து கடனை திருப்பி செலுத்­தும் படிகூறி வருகின்­ற­னர். இதனால் நாங்­கள் அதிர்ச்சி அடைந்து தங்க சுஜிதாவி­டம் சென்று கேட்­டால் உங்­க­ளால் முடிந்­ததை பாருங்­கள் என கூறி வந்த நிலையில் தற்­போது குடும்­பத்­து­டன் தலைம­றைவு ஆகிவிட்­டார். மேலும் தங்க சுஜிதா குடும்­பத்­து­டன் வெளி நாடுதப்பி செல்­வ­தாக கூறப்­ப­டுகிறது. நாங்கள் கன்னியாகுமரி காவல்நிலை­யத்தில் பல முறை புகார் அளித்­தும் எந்­தவித நட­வடிக்­கை­யும் எடுக்­கவில்லை எனவே எங்­களை ஏமாற்றி வெளிநாடு தப்பி செல்ல இருக்­கும் தங்க சுஜிதா மற்­றும் அவரது குடும்­பத்­தினர் அவ­ருக்கு துணை போன வங்கி மேலா­ளர்­கள் இருவர் மீது கடும் நட­வடிக் கை எடுத்து எங்­க­ளது பணத் தை மீட்டு தரும்­படி அந்த மனுவில் கூறப்­பட்­டுள்­ளது. சுய உதவிக்­குழு தலை­வியால் ஏமாற்­றப்­பட்டு பணத் தை இழந்த ஊர் மக்­களுக்கு ஆதர வாக நாம் தமிழர் கட்சியின் மக­ளிர் பாசறை மாநில ஒருங்­கி­ணைப்­பா­ளர் மரிய ஜெனி­பர், தீபக்,ஜோஷ், மற்­றும் நிர்­வா­கி­கள் உடன் இருந்­த­னர்.