மெய்யழகனுக்கு 2 பாடல்கள் பாடிய கமல்
சென்னை, செப்.4:திரையுலகில் பல்வேறு பிரிவுகளில் இயங்கி வரும் கமலஹாசன், மற்ற நடிகர்களின் படங்களிலும் சொந்தக் குரலில் பாடி வருகிறார். அந்த வகையில், கார்த்தி நடிக்கும் ‘மெய்யழகன்’என்ற படத்திற்காக அவர் 2 பாடல்களை பாடியிருக்கிறார். விஜய் சேதுபதி, திரிஷா நடித்த ’96’என்ற படத்தை தொடர்ந்து ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் எழுதிய இயக்கியுள்ள படம் ‘மெய்யழகன்’.இதில் கார்த்தி, ராஜ்கிரண், அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா நடித்துள்ளனர். சூர்யா, ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் 27ஆம் தேதி திரைக்கு வருகிறது. கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். உமாதேவி எழுதியுள்ள ‘யாரோ இவன் யாரோ’, ‘போகிறேன் நான் போகிறேன்’ ஆகிய பாடல்களை கமலஹாசன் பாடியுள்ளார். இதை அடுத்து கமலஹாசனுக்கு நன்றி தெரிவித்த சூர்யா நானும் ஜோதிகாவும் தயாரித்துள்ள ‘மெய்யழகன்’படத்தின் பாடலுக்கு உங்க உங்களின் தனித்துவமான குரலை கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி கமல் அண்ணா. உங்களிடம் இந்த மெல்லிய தொனி, உணர்ச்சிகளின் உலகத்திற்கு அழைத்து சென்று நாஸ்டால்ஜியாவாக உணர வைக்கும் மந்திரம் கொண்டது. என் மீதான உங்களின் இந்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி கமல் அண்ணா என்று குறிப்பிட்டுள்ளார்
மெய்யழகனுக்கு 2 பாடல்கள் பாடிய கமல்.






