தேர்­த­லுக்கு முன் மதுக்­கடை­களை மட்டும் மூடிவிட்­டால் எத்­தனை விஜய் வந்­தா­லும் தி.மு.க.வை அசைக்க முடியாது! * மறைம­லைந­கர் கூட்­டத்தில் தொல்.திருமா­வளவன் பேச்சு; *‘‘வி.சி.க.வுக்கு எந்த விளைவு வந்­தா­லும் சந்­திக்­கத் தயார்!!

செங்­கல்­பட்டு, செப். 13– செங்­கல்­பட்டு மாவட்­டம் மறைமலை நகர் பகு­தி­யில் உள்ள தனி­யார் திரு­மண மண்­ட­பத்­தில் செங்­கல்­பட்டு, சென்னை,காஞ்­சி­பு­ரம், திரு­வள்­ளூர் ஆகிய நான்கு மாவட்­டங்­களைச் சேர்ந்த நிர்­வா­கி­க­ளு­டன் மண்­டல அள­வி­லான செயற்­குழுகூட்­டம் நடைபெற்­றது.அக்டோ­பர்2–ஆம்தேதி கள்­ளக்­கு­றிச்­சி­யில் நடைபெற உள்ள மது மற்­றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ள நிலை­யில் விடு­தலைச் சிறுத்­தை­கள் கட்சி தலைவர் திரு­மாவ­ள­வன் தலைமையில் செயற்­குழு கூட்­டம் நடை பெற்­றது. இதில் அக்கட்­சி­யைச் சேர்ந்த நிர்­வாகி­கள் தொண்­டர்­கள் பெண்­கள் ஆண்­கள் என ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்­டோர் கலந்து கொண்­டனர்.முன்­னதாக நேற்று உயி­ரி­ழந்த மார்க்­சிஸ்ட்கம்­யூ­னிஸ்டு கட்­சி­யின் அகில இந்­திய பதுச்­செ­ய­லாளர் சீத்­தாராம் யெச்­சூ­ரிக்கு விசிக நிர்­வா­கி­கள் சார்­பில் மவுனஅஞ்­சலி மற்­றும் வீரவ­ணக்­கம் செலுத்­தப்­பட்­டது.தொடர்ந்து மேடை­யில் பேசிய திரு­மா­வ­ள­வன் கூறி­யவது:–­ கட்டா­யம்தா  ­ நாம் மதுக்­கடைகளை மூட முடி­யும் என்ற நம்­பிக்­கையோடு இருக்க வேண்­டும், வரும் தேர்­தல் காழ்ப்­பு­ணர்ச்­சிக்காக நாம் இதை செய்­கின்­றோம் என்று சீன் போடு­வ­தாக சிலர் கூறு­கி­றார்­கள். 2026 தேர்­த­லில் நமக்கு பின்­னடைவு ஏற்­ப­டும்,என்ற நிலை ஏற்­பட்­டால் கட இந்த போராட்­டம் நடத்­து­வ­தில் இருந்து ஒரு­போ­தும் நாம் பின் வாங்­கக்கூ­டாது. திமுக, அதி­முககட்­சிக்கு அடுத்­த­ப­டி­யாக தமி­ழ­கத்­தில் மிகப்­பெ­ரியகட்­சி­யாக விசி­கதான் உள்ளது. இந்த மது ஒழிப்பு போராட்­டத்தை நடத்து­வதன் மூலம் நமக்கு எந்த  ­ விளை­வு­கள் வந்­தா­லும் அந்த விளை­வு­களை எதிர்கொள்­வதற்கு தயாராக இருக்­க வேண்­டும். இது போன்ற போராட்­டங்­களை நாம் முன்­னெடுத்து நடத்­து­வ­தால் திமுக உட­னான விசிக கூட்­டணியை பல­வீ­னப்­ப­டுத்த வேண்­டு ­ ெமனநினைக்­கி­றார்­கள். தமிழ்நாட்டு அர­சி­ய­லில் கூட்­டணி­யில் இருந்து கொண்டே மக்­கள் பிரச்­ச­னைகளை துணிந்து பேசு­கின்ற துணிச்­சல் உள்ள இயக்­கம் விசிக மட்­டும் தான். தமிழ்­நாட்­டுக்கு நாம் விடுக்­கின்ற ஒரே வேண்­டு­கோள் படிப்­ப­டி­யாக­வாவதுஅரசு மது­பானகடைகளை மூடி வர­லாற்­றில்நல்ல பெயரை எடுத்து நிலை­யான வெற்­றியை பெறுங்­கள் என விசிக வாழ்த்­து­கி­றது.திமுக மட்­டும் வரும் தேர்­த­லுக்கு முன்­பாக அரசு மது­பான கடைகளை முழு­மையக மூடி­விட்­டால் எத்­தனை விஜய் வந்­தா­லும் திமு­கவை அசைக்க முடி­யாது.திமுக வெற்றி பெற்­றால் விசி­கவுக்கு என்ன  லாபம் என கேள்­வி­யும் உண்டு.மது­பான கடைகளை மூடு­வ­தால் விசி­க­வுக்கு வெற்­றி­தான். மது­பான கடைகளை விடு­தலை சிறுத்­தை­கள் கட்சி போராட்­டதால் அரசு மூடி­யது என்­றால்அடுத்­த­டுத்து வரும் தேர்­த­லில் விடு­தலை சிறுத்தைகளைத்தான் மக்­கள் வரவேற்­பார்­கள் அது ­தான்நமக்கு கிடைத்த வெற்றி.இவ்­வாறு திரு­மா­வ­ள­வன் கூறி­னார்.